ஷாக்.. ரயிலில் ஏசி பெட்டியில் ஏறி வயதான தம்பதி மீது சிறுநீர் கழித்த போதை இளைஞர்.. உ.பியில் கொடூரம்
லக்னோ: ஓடும் ரயிலில் வயதான பயணிகள் மீது குடிபோதையில் இளைஞர் ஒருவர் சிறு நீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிசாமூதின் நகரில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள மனிகாபூர் வரை சம்பர்க் க்ரண்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் ஏசி பெட்டியான பி 3 கோச்சில் வயதான தம்பதியர் பயணம் செய்துள்ளனர். இருவருமே மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது. படுக்கை வசதி கொண்ட அந்த ரயிலில் லோயர் பெர்த்தில் இருவரும் இருந்துள்ளனர்.

அப்போது மதுபோதையில் அங்கு வந்த 19-வயதான இளைஞர் ரிதேஷ் என்பவர், அந்த தம்பதியர் மீதும் அவர்களின் லக்கேஜ் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதனால் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ஸ்டேஷன் வழியாக ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. உடனடியாக அந்த தம்பதியர் சத்தம் எழுப்பி டிடிஇக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் உடனடியாக அங்கு வந்த டிக்கெட் பரிசோதகரும் ஜான்சியில் உள்ள ரயில்வே போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுடுத்து, ஜான்சி ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் அங்கு போலீசார் தயாராக இருந்தனர். வயதான தம்பதியர் மீது சிறு நீர கழித்த ரிதேஷ் என்ற இளைஞரை ரயிலில் இருந்து இறக்கி விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அந்த இளைஞர் மதுபோதையில் இருந்தவர் டெல்லியில் உள்ள குதுப் விஹாரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. உத்தர பிரதேசத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் இருந்து அவர் ரயிலில் ஏறியதோடு மது போதையில் தவறுதலாக சிறுநீர் கழித்து விட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து ரிதேஷ் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அபராதமும் விதித்தனர். அபராத தொகையை செலுத்திய பிறகு ரிதேஷ் விடுதலை செய்யப்படார்.
பாதிக்கப்பட்ட முதியவர் இது பற்றி கூறும் போது, இப்படி நடக்கும் என கனவில் கூட நாங்கள் நினைத்தது கிடையாது. ரயிலில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்ற போது அதை நரகம் போல உணர்ந்தோம்" என்று வேதனையுடன் தெரிவித்தார். ஓடும் ரயிலில் பயணிகள் மீது இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ரயில்களில் இனி தொடராமல் இருக்க உரிய நடவடிக்கையை ரயில்வே போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications