பாம்பு கடித்ததால்.. கங்கையில் கயிறு கட்டி மிதக்க வைக்கப்பட்ட சிறுவன்! கடைசியில் இப்படி ஆயிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், மந்திரவாதி பேச்சை கேட்டு கங்கை நதியில் கயிறு கட்டி மிதக்க வைத்ததில், அந்த சிறுவன் உயிரிழந்திருக்கிறார். மூடநம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாம்பு கடித்துவிட்டது எனில், முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியம். எனவே, முடிந்த வரை விரைவாக கடிபட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

snake

சிறுவனுக்கு என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 14 வயது சிறுவன், வயலில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்திருக்கிறது. கொஞ்ச நேரத்திலேயே சிறுவன் மயக்கமடைந்திருக்கிறான். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், பாம்பு கடித்திருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். ஆனால், சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், மந்திரவாதியிடம் தூக்கி சென்றிருக்கிறார்கள்.

சாமியாரின் பேச்சு

சிறுவனை பார்த்து, சில மந்திரங்களை சொன்ன மந்திரவாதி, கங்கை நதியில் சிறுவனை மிதக்க வைத்தால் உடலில் ஏறிய விஷம் இறங்கிவிடும் என்று கூறியிருக்கிறார். மந்திரவாதியின் பேச்சை கேட்டு, சிறுவனை மூங்கில் தெப்பத்தில் கட்டி, 12 மணி நேரம் கங்கை நதியில் மிதக்க வைத்திருக்கிறார்கள். நீண்ட நேரமாக எந்த அசைவும் இல்லாததால் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

மூடநம்பிக்கையால் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாம்பு கடியும் விழிப்புணர்வும்

விஷ பாம்புகள் கடித்துவிட்டது எனில், முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானதாகும். அதற்குள் விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டால் சிறுவன் உயிர் பிழைத்திருந்திருப்பார். இந்த சம்பவத்தில், சிறுவனின் உடலில் நஞ்சு பரவ தொடங்கியவுடன் உள்ளுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்திருக்கும். உடலின் வெப்பநிலை குறைந்துக்கொண்டே வரும். சிறுவனின் உடல் கங்கை நதியில் வைக்கப்பட்டதால், உடலின் வெப்பநிலை வேகமாக குறைந்து ஹைப்போதெர்மியா ஏற்பட்டிருக்கும்.

சிறுவன் ஏற்கெனவே மயக்க நிலைக்கு சென்றிருப்பதால், நதியின் நீர் சிறுவனின் நுரையீரலுக்குள் நுழைந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இறுதியாக சிறுவன் உயிரிழந்திருக்கிறார்.

என்ன செய்திருக்க வேண்டும்?

உயிரிழப்பை தடுக்க, பாம்பு கடித்தவுடன் அது எந்த வகையான பாம்பு என்பதை தேடாமல் உடனடியாக மருத்துவமனைக்கு போக வேண்டும். ஏனெனில் கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டைவிரியன், நல்ல பாம்பு என 4 வகையான விஷ பாம்பு கடிகளுக்கும் சேர்த்துதான் விஷ முறிவு மருத்து தயாரிக்கப்படுகிறது. எனவே எந்த பாம்பு என்று தெரியவில்லை என்றாலும், இந்த மருந்து கொடுத்தால் காப்பாற்றிவிடலாம். எனவே கடித்த பாம்பை தேடிக்கொண்டிருக்க கூடாது.

என்ன செய்யக்கூடாது?

அதேபோல பாம்பு கடித்துவிட்டது எனில், பதற்றமடைய கூடாது. அப்படி செய்தால் இதய துடிப்பு அதிகரித்து உடல் முழுவதும் விஷம் பரவிவிடும். கடித்த இடத்தை பிளேடால் கீறுவது, விஷத்தை வாய் வைத்து உறிஞ்சி வெளியே எடுப்பது போன்ற தவறுகளை செய்ய கூடாது. இப்படி செய்வதால் விஷம் வெளியேறாது. உடலிலிருந்து விஷம் வெளியேறாது. அதற்கு விஷமுறிவு மருந்து கொடுத்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+