ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைப்பதில் தடைகள் இருக்கக் கூடாது..உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு அரசின் நல்லத்திட்டங்கள் சென்று சேர்வதில் எந்த தடைகளும் இருக்கக் கூடாது என்றும் ஒருவரும் பாதிக்கப்படக்கூடாது என ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஜனதா தர்ஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. கோரக்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் சேர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

State government stands with the needy people, ensure no on suffers: UP CM Yogi at Janata Darshan

கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்நாத் கோவிலில் மஹாந்த் திக்வ்ஜ்யநாத் ஸ்ம்ரிதி பவன் முன்பு ஜனதா தர்ஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மவட்டங்களை சேர்ந்த 200 பேர் பங்கேற்றனர். அப்போது மக்கள் அளித்த மனுக்களை பார்வையிட்டு சம்பந்தட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்கி பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அரசின் நலத்திட்டங்கள் தேவைப்படும் தகுதியான மக்களுக்கு சென்று சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஒருவரும் பாதிக்கப்படக்கூடாது எனவும் பேசினார். அப்போது, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு நிதி உதவிய கோரிய மனுக்களை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத், முடிந்த அளவு விரைவாக தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், மக்கள் அமர்ந்து இருந்த பகுதிக்கே சென்ற யோகி ஆதித்யநாத், அப்போது பேசுகையில், தேவையான மக்களுக்கு உறுதுணையாக மாநில அரசு நிற்கிறது. நிதி பிரச்சினையால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் இருக்கும் மக்களுக்கு அரசு துணை நிற்கும். எனவே மக்கள் அரசை எந்த தயக்கமும் இன்றி அணுகலாம். அப்போதுதான் அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக அரசால் தீர்வு காண முடியும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+