துண்டான கையை தூக்கிக்கொண்டு ஓடிய தெருநாய்! உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மருத்துவமனையில் பரபரப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தெருநாய் ஒன்று துண்டிக்கப்பட்ட மனிதனின் கையை, கவ்விக்கொண்டு மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை பல்கலைக்கழக வளாகத்தில், இன்று காலை தெருநாய் ஒன்று வாயில் மனிதனின் கையை கவ்விக்கொண்டு திரிந்துகொண்டிருந்துள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் அலறி ஓடியுள்ளனர். சிலர் நாளை துரத்தியுள்ளனர். கையை தூக்கிக்கொண்டு ஓட முடியாத நாய், அதை கீழே போட்டுவிட்டு சென்றிருக்கிறது.

இதனையடுத்து நாய் கவ்விக்கொண்டு ஓடிய கை யாருடையது? என கேள்வி எழுந்திருக்கிறது. நாய் விட்டுச்சென்ற கையை மீட்க வேண்டும் என மருத்துவமனை தரப்பிடம் பொதுமக்கள் சிலர் கேட்டுக்கொண்டனர். ஆனால், நீண்ட நேரமாக கை மீட்கப்படாமல் ரோட்டின் ஓரத்தில்தான் கிடந்திருக்கிறது. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் கை மீட்டு கொண்டு சென்றிருக்கின்றனர்.
மருத்துவமனையிலிருந்து உடல் கழிவுகள் சரியான முறையில் அப்புறப்படுத்தப்படாமல், குப்பை தொட்டிகளிலேயே வீசிவிடுவதாக உள்ளூர் மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே குப்பை தொட்டியிலிருந்து நாய், மனித கையை கொண்டு வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை தொடங்கியிருக்கிறது.
நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “எங்கள் ஊழியர்கள் தெரு நாளை பிடித்து கையை மீட்டிருக்கின்றனர். இது யாருடையது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம் கையை, போலீசிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். எங்களுக்கு தெரிந்த வரை, நாய் மனித கையை வெளியில் எங்கோ இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறது. சரியான முறையில் மனித கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருந்த பகுதியிலிருந்து இந்த கை கிடைத்திருக்கலாம். எங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை” என்று கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கூட, தெரு நாய் ஒன்று மனிதனின் கையை கவ்விக்கொண்டு வந்திருக்கலாம் என சிலர் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாகவே உத்தரப் பிரதேசத்தின் பொது சுகாதாரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் மருத்துவக் கல்லூரியை கட்டும் பணியை பாஜக அரசு கடந்த ஆண்டுதான் தொடங்கியது. ஆனால் தென் மாநிலங்களில் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதையெல்லாம் ஒப்பிட்டு, உ.பி அரசு மீது நெட்டிசன்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு உத்தரப் பிரதேசத்தைதான் ரோல் மாடலாக காட்ட பாஜக திட்டமிட்டிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் மனித கையை தெருநாய் தூக்கிக்கொண்டு ஓடியுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications