மதுரா புனிதமான நகரம்! சன்னி லியோனுக்கு எதிராக கொந்தளித்த சாமியார்கள்! நியூ இயர் பார்ட்டி ரத்து
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மதுர நகரில், நடிகை சன்னி லியோன் பங்கேற்க இருந்த பார்ட்டி, உள்ளூர் சாமியார்களின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மதுரா நகரம் புனிதமானது என்றும் அதை அசுத்தப்படுத்த விடமாட்டோம் என்றும் கூறி சாதுக்கள் சன்னி லியோனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
கமலின் 'இளமை இதோ' பாடல் வெளியான காலத்திலிருந்து.. நியூ இயர் என்றாலே குத்தாட்டாம்தான் என்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. எனவே திரும்பும் பக்கம் எல்லாம் புத்தாண்டு அன்று கொண்டாட்ட கோலத்தில் மக்கள் இருப்பார்கள். இதற்கான ஏற்பாடுகள் இரண்டு நாட்கள் முன்பு இருந்தே தொடங்கிவிட்டன.

அப்படித்தான் உத்தரப் பிரதேசம் மதுராவை சேர்ந்த இளசுகள் டீம் ஒன்று, நட்சத்திர ஓட்டலில் பார்ட்டியை ஏற்பாடு செய்திருக்கிறது. பார்ட்டி எனில் அதில் ஆடல் பாடல் வேண்டுமே.. எனவே பார்ட்டியை இன்றும் வைப் ஆக்க, சன்னி லியோனை களமிறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக தேதி வாங்கி, சன்னி லியோன் புக் செய்யப்பட்டிருக்கிறார். அடேங்கப்பா நம்ம ஊருக்கும் சன்னி லியோன் வராங்களா! என அவர் வரும் செய்தி உ.பி முழுவதும் காட்டு தீ போல பரவியிருக்கிறது.
இப்படி இருக்கையில்தான் உள்ளே புகுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் சாதுக்கள். ஶ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தினேஷ் ஃபலாஹரி இந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக நடத்தக்கூடாது என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
"கிருஷ்ணர் ஆன்மீக செயல்கள் புரிந்த இப்புனித பூமியில், சன்னி லியோனை அழைப்பது மத உணர்வுகளை புண்படுத்துவதாகும். பிருஜ் பூமி மற்றும் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை பரப்பும் வகையிலும் சிலர் இவரை அழைக்கின்றனர். இத்தகையோர் பிருஜ் பூமியிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்" என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சாமியார்களின் எதிர்ப்பால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். நிகழ்ச்சி நடக்க இருந்த 'தி ட்ரங்க் பாரின்' பங்குதாரர் மிதுல் பதக், "உள்ளூர் சாமியார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம். டிக்கெட் பணம் திரும்ப அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டது. சன்னி லியோன் டி.ஜே-வாக மட்டுமே வரவிருந்தார். அவர் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்கு எதிர்ப்பு இல்லாதபோது, இங்கு மட்டும் ஏன் எதிர்ப்பு?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications