கோடிக்கணக்கில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிய மோட்டோ ஜிபி பந்தயம்.. அசத்திய உ.பி அரசு!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இந்தியாவில் முதன் முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மோட்டோ ஜிபி எனப்படும் பைக் பந்தயம் நடைபெற்றது. இதை வெற்றிகரமாக நடத்தி முடித்ததன் மூலமாக உத்தரப் பிரதேசத்திற்கு கோடிக்கணக்கில் பொருளாதார வாய்ப்புகளை உருவாகியுள்ளது என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.

இது குறித்து தொழில்துறை மேம்பாட்டு அமைச்சர் நந்த கோபால் குப்தா கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற வணிக கண்காட்சி தற்போது நடைபெற்றுள்ள இந்த மோட்டோ ஜிபி பந்தயம் ஆகியவை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் 2023ம் ஆண்டின் ஹாட்ரிக் நிகழ்வுகளாகும். தற்போது நாம் நடத்திய மோட்டோ ஜிபி பந்தயம் 200 நாடுகளில் உள்ள 50 கோடி வீடுகளை சென்று சேர்ந்திருக்கிறது.

The UP government has claimed that the MotoGP race has created economic opportunities worth crores

மோட்டோ ஜிபி நிகழ்வுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான பொருளாதார நடவடிக்கைகளையும் அத்துடன் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தொழில்துறை மேம்பாடு, முதலீடு, ஏற்றுமதி மற்றும் விளையாட்டுத் துறையில் சர்வதேச நிகழ்வுகளுக்கான மையமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது. இது அனைத்தும் எங்களின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை சாத்தியப்படுத்தும்.

The UP government has claimed that the MotoGP race has created economic opportunities worth crores

இந்த மோட்டோ ஜிபி நிகழ்வு புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசத்தின் உண்மையான படத்தைக் காட்டுகிறது. புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசத்தில், ஒருபுறம், பண்டைய கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் உறுதிப்பாடு உள்ளது, மறுபுறம் மோட்டோ ஜிபி போன்ற உலகளாவிய நிகழ்வை நடத்துவதற்கான திறனும் இருக்கிறது. இவை அனைத்திற்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அர்ப்பணிப்புதான் காரணம்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+