உ.பியில் அடியோடு மாறும் பள்ளி கல்வி.. ஆசியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தொடக்கம்! அசத்தும் யோகி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசம் முழுவதும் இன்று முதல் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை ஆசிரியர் பயிற்சி பிரசாரம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களின் தரம் மேம்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி இன்று முதல் தொடங்குவதாக கூறியுள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆரிசரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் இன்று முதல் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. மொழி மற்றும் கணித பாடங்களில் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவே இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்று மாநில அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ஆனால் இந்த பயிற்சி வகுப்பானது முற்றிலும் வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
அதன்படி பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களின் வெற்றிகளை பயிற்சி அளிப்பவர்கள் கேட்டறிய வேண்டும். ஆசியர்கள் கடந்து வந்த பாதைதான் வளமான குழந்தைகளை வளர்த்தெடுக்க உதவும். அப்படிப்பட்ட ஆசியர்களை கண்டெடுத்து அவர்களை கௌரவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி அதித்யநாத் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications