சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட மாநிலமான உ.பி.. அசாம்கார், புலந்தஷாரில் இரு சிறுமிகள் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இரு வேறு சம்பவங்களில் 14 வயது சிறுமியும், 8 வயது சிறுமியும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹாத்ராஸ் மற்றும் பல்ராம்பூரில் இரு தலித் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு இறந்த சம்பவத்தின் கொடூரம் அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசத்தில் மேலும் இரு பலாத்காரச் சம்பவங்கள் நடந்துள்ளன.

அசாம்கார் மாவட்டம் ஜியான்பூரை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் தனது பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அங்கிருந்த 20 வயது இளைஞர் அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஆடை

ஆடை

சிறுமியின் ரத்த கறைகள் ஆடையில் இருந்ததால் அந்த சிறுமியின் தாயிடம் சென்ற அந்த இளைஞர், சிறுமி தனது வீட்டிலேயே குளித்துவிட்டார் என்றும் மாற்று துணி கேட்கிறார் என்றும் கூறி மாற்றுத் துணியை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

கைது

கைது

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய சிறுமி வலியால் துடித்தார். மேலும் அவருக்கு பிறப்புறுப்பில் இருந்து ரத்த கசிவும் ஏற்பட்டது. இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சின்னஞ்சிறு பிஞ்சை பலாத்காரம் செய்த அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

அது போல் புலந்த்ஷார் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அந்த சிறுமியை பக்கத்து வீட்டுக்காரரான 20 வயது இளைஞர் செவ்வாய்க்கிழமை பலாத்காரம் செய்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் அந்த சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

உத்தரப்பிரதேசத்தில் இது போன்று பெண்களும் குழந்தைகளும் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இது அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்பதையே காட்டுகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களும் சிறுமிகளும் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+