உ.பி.யில் இரு சாதுக்கள் அடித்துக் கொலை.. கடவுளின் சித்தம் என கூறிய கஞ்சா ஆசாமி கைது
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்சாஹரில் உள்ள கோயிலில் இரு சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புலந்த்சாஹர் மாவட்டத்தில் உள்ள அனுப்ஷாரில் உள்ள பகோனா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெகன்தாஸ் (55), ஷேர்தாஸ் (35). சாதுக்களான இவர்கள் இருவரும் அங்குள்ள கோயிலில் அடித்துக் கொல்லப்பட்டனர். ஜெகதீஷ் கடந்த 15 ஆண்டுகளாக கோயிலில் பணிபுரிந்து வந்தார். அது போல் ஷேர்தாஸும் 5 ஆண்டுகளாக கோயிலில் பணி செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அந்த கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பொதுமக்கள் கோயிலில் இருவரின் சடலங்களை பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

திருட்டு
இதையடுத்து இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாதுக்களிடம் இருந்த இடுக்கியை அந்த நபர் திருடிக் கொண்டு சென்றுள்ளார்.

கூர்மையான ஆயுதம்
அந்த இடுக்கியை திருப்பி தருமாறு அந்த நபரிடம் இரு சாதுக்களும் கேட்டுள்ளனர். அப்போது அந்த நபருக்கும் சாதுக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இருவரையும் அடித்தே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து மிகவும் கூர்மையான ஆயுதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

கடவுளின் விருப்பம்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் பகோனா கிராமத்தில் இரு சடலங்கள் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து இன்று காலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றோம். அப்போது முராரி என்ற நபர் அரை நிர்வாணமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் சம்பவ இடத்திலிருந்து இரு கி.மீ. தூரத்தில் மடக்கி பிடித்தனர். அந்த நபரிடம் பேசிய போது அவர் கஞ்சாவை பயன்படுத்தியிருந்தார். மேலும் முதலில் ஏன் கொன்றாய் என கேட்டதற்கு இவர்களை கொல்வது கடவுளின் விருப்பம் என தெரிவித்தார்.

பரபரப்பு
கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் கிராமத்தில் சிறுநீரகத்தை திருட வந்தவர்கள் என நினைத்து சாதுக்கள் சுஷில் கிரி மகாராஷ், நிலேஷ் தெல்காடே உள்பட 3 பேர் அப்பகுதி மக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரு சாதுக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications