உ.பி. யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- 20 பேர் பலி
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தின் பண்டா பகுதியில் யமுனை ஆற்றில் 35 பேர், படகு ஒன்றில் பயணித்துள்ளனர். பண்டாவின் மார்க் பகுதியில் இருந்து ஃபதேபூர் மாவட்டம் ஜரோலி பகுதிக்கு படகில் இவர்கள் பயணித்துள்ளனர்.

யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படகு திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
இதனையடுத்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். முதலில் இந்த படகு விபத்தில் 4 பேர் மட்டும் பலியானதாக தகவல்கள் வெளியானது. மேலும் பலர் நீந்தியபடியே ஆற்றின் கரை சேர்ந்தனர் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படகு விபத்தில் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications