உ.பி. சட்டசபை தேர்தல்: பிற்படுத்தப்பட்ட ஜாதி வாக்குகளை லம்ப்பா அள்ள அகிலேஷ் யாதவ் பக்கா ஸ்கெட்ச்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் மொத்தமாக அள்ளுவதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியூகம் வகுத்து செயல்பட்டு வருவது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
உ.பி. சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி. தேர்தல் தொடர்பான இதுவரையிலான கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே இருக்கின்றன. ஆனால் 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் நிச்சயம் பாஜக 100 இடங்களை இழக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பாஜகவைப் பொறுத்தவரையில் எடுத்த எடுப்பிலேயே 7 பிற்படுத்தப்பட்ட ஜாதி கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பாஜகவின் இந்த கூட்டணி வியூகத்துக்கு பதிலடி தரும் வகையில்தான் மெகா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

மேற்கு உ.பி.- ஜாட்,முஸ்லிம்கள்
ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் கட்சியுடன் (ஆர்.எல்.டி) கூட்டணி அமைத்திருக்கிறது சமாஜ்வாதி கட்சி. ஜாட், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் மேற்கு உ.பி.யில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆர்.எல்.டி. தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். குறிப்பாக விவசாயிகள் போராட்டமானது மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு மிக கடுமையான சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு முன்னர் வரை மேற்கு உ.பி.யில் முசாபர் நகர் மத மோதல் போன்ற காரணங்களால் ஜாட், முஸ்லிம்கள் பிரிந்து நின்றனர். ஆனால் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஜாட்களையும் முஸ்லிம்களையும் கை கோர்க்க வைத்திருக்கிறது. இதனால்தான் ஆர்.எல்.டி.யுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் அகிலேஷ் யாதவ். 30 முதல் 35 தொகுதிகளை ஆர்.எல்.டி கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முன்வந்திருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

ராஜ்பார் வாக்குகள்
இதேபோல் கிழக்கு உ.பி.யில் ராஜ்பார் சமூக வாக்குகளை அறுவடை செய்வதற்கு ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி- எஸ்.பி.எஸ்.பியுடன் கை கோர்த்திருக்கிறார் அகிலேஷ் யாதவ். கடந்த தேர்தலில் கிழக்கு உ.பியில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 72 இடங்களை பாஜக வென்றது. இதற்கு காரணமே எஸ்.பி.எஸ்.பியுடனான பாஜகவின் கூட்டணிதான். முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எஸ்.பி.எஸ்.பி கட்சி இப்போது பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் வேலை என அகிலேஷ் யாதவுடன் கை கோர்த்திருக்கிறது. மொத்தம் 150 தொகுதிகளில் எஸ்.பி.எஸ்.பி கட்சி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

சமாஜ்வாதி- ஆம் ஆத்மி கூட்டணி
அத்துடன் ராஜ்பார் சமூகத்தின் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர்களான ராம் அச்சல் ராஜ்பார், கமலகாந்த் இருவரும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதுவும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணிக்கு கூடுதல் பலம் என சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போதைய நிலையில் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியும் இணைய இருக்கிறது. இதுவரை தனித்து போட்டியிடுவோம் என கூறி வந்த ஆம் ஆத்மி கட்சி, கள யதார்த்தம் அகிலேஷ் யாதவுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்தே கூட்டணிக்கு தயாராகிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜகவுக்கு நெருக்கடி
என்னதான் விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தாலும் பாஜக பக்கம், உ.பி. விவசாயிகள் அவ்வளவு எளிதாக சாய்ந்துவிடமாட்டார்கள் என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். ஓராண்டு கால போராட்டத்தின் மூலம் பெண்கள் மத்தியில் பாஜக மீது மிக மிக கடுமையான அதிருப்தி நிலவுகிறது; தற்போதைய சூழ்நிலையில் கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம்.. ஆனால் தேர்தல் நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறி அகிலேஷ் தலைமையிலான கூட்டணிக்கு சாதகமானாலும் ஆச்சரியம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications