உ.பி. தேர்தல்: பிராமணர் வாக்குகளுக்கு மாயாவதியின் பி.எஸ்.பி குறி- மவுனமாக கடந்து போகும் பாஜக- ஏன்?
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிராமணர் வாக்குகளுக்கு குறிவைத்து மீண்டும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி களமிறங்கி இருக்கிறது. ஆனால் இதனை பற்றி எந்த கவலையும் கருத்தும் தெரிவிக்காமல் பா.ஜ.க. மவுனமாக கடந்து போவதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது.
பா.ஜ.க.வை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கான வழியாக பார்ப்பது கட்சிகளை பிரித்தாளும் அணுகுமுறைதான். அது கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் எனில் பாரபட்சமே பார்க்காமல் மோதவிட்டு அறுவடை செய்துவிடும். இதற்கு நல்ல உதாரணம் பீகார் தேர்தல்.
பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூவுடன் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு செய்தது பாஜக. இந்த கூட்டணியில் சிராக் பாஸ்வானின் எல்.ஜே.பி. இடம்பெறவில்லை. ஆனால் சிராக் பாஸ்வான் கட்சி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது; அத்துடன் ஜேடியூவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை சிதறடித்தது; சிராக் பாஸ்வானின் இந்த வியூகத்தை கண்டும் காணாமல் அப்போது வேடிக்கை பார்த்தது பாஜக. விளைவு சட்டசபை தேர்தலில் ஜேடியூவைவிட பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தன. பின்னர் சிராக் பாஸ்வானின் எல்ஜேபியையே பாஜக இரண்டாக உடைத்தது தனி வரலாறு.

புதுச்சேரியில் பாஜக விளையாட்டு
அதேபோல் புதுச்சேரியில் அதிமுக- என்.ஆர். காங்கிரஸுடன் பாஜக கூட்டணி அமைத்தது. தேர்தலில் அதிமுக தோற்றது; என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அணி வென்றது. அதிமுகவுக்கு நியமன எம்.எல்.ஏ. பதவியை பாஜக தரும் என எதிர்பார்த்தனர். ஆனால் 3 நியமன எம்.எல்.ஏக்களையும் பாஜகவே வைத்துக் கொண்டதால் புதுச்சேரி சட்டசபையில் முதல் முறையாக அதிமுக இடம்பெறவே முடியாமல் போனது. தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றுதான் ஆக வேண்டும் என்பதற்காகவே பாஜக இத்தகைய வியூகங்களை பின்பற்றுகிறது.

உ.பி. தேர்தல்
இந்த பின்னணியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜக பின்பற்றி வரும் அணுகுமுறை கவனிக்க வைக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.தான் தேர்தல் பணிகளை மிக வேகமாக முன்னெடுத்தது. இதனையடுத்து தேர்தல் களத்துக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் வந்துவிட்டன.

பாஜகவுக்கு எதிரான சமாஜ்வாதி
உ.பி.யிலும் தேசிய அளவிலும் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் சமரசமே இல்லாமல் சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இருந்த போதும் தொகுதி பங்கீட்டு சிக்கலைத் தவிர்க்க காங்கிரஸுடன் கூட்டணி சேரப் போவது இல்லை என அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். இன்னொரு பக்கம் மாயாவதியும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன கையோடு தேர்தல் வியூகத்தை பகிரங்கப்படுத்தி களமிறங்கிவிட்டார்.

மாயாவதி வியூகம்
2007 சட்டசபை தேர்தலில் பிராமணர்கள்- தலித்துகள் வாக்குகளுக்கு குறிவைத்து வியூகம் வகுத்து செயல்பட்டு அமோக வெற்றி பெற்றார் மாயாவதி. அதனால் அதே பார்முலாவை இப்போது கையில் எடுப்பதாக அறிவித்து பல இடங்களில் பிராமணர் மாநாடுகளை பகுஜன் சமாஜ் நடத்தியும் வருகிறது. அத்துடன் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மிக கடுமையான விமர்சனங்களையும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். அதேபோல் சமாஜ்வாதி கட்சியும் பிராமணர் வாக்குகளுக்கு குறிவைத்து தேர்தல் பணியாற்றுகிறது.

பாஜகவின் போக்கு
இப்படி பிராமணர் வாக்குகளுக்கு குறிவைக்கும் இரு கட்சிகளுமே பாஜகவை விமர்சிக்கின்றன. ஆனால் பாஜகவோ, சமாஜ்வாதி கட்சியை எதிர்க்கும் அளவுக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் மீது விமர்சனங்களை அவ்வளவாக முன்வைக்கவில்லை. மாறாக பகுஜன் சமாஜ் கட்சியின் விமர்சனங்களை மவுனமாகவும் லாவகமாகவும் கடந்து போகிறது பாஜக. அதுதான் பல்வேறு கேள்விகளை அரசியல் களத்தில் எழுப்பி இருக்கிறது.

பாஜகவின் வியூகம் என்ன?
அதாவது பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் மோதட்டும்; எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும் போது இயல்பான ஆதாயம் தங்களுக்குதான் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பாஜக இருக்கிறதா? அல்லது சமாஜ்வாதி கட்சியை வீழ்த்த பி டீம் பாணியில் பகுஜன் சமாஜ் கட்சியை பாஜக பயன்படுத்துகிறதா? என்பதுதான் அந்த கேள்விகள்.. இந்த கேள்விகளுக்கு வரப்போகிற அரசியல் போக்குகள் எளிதாகவே பதிலளித்துவிடும்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications