Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் திருப்பம்.. உ.பி.யில் பட்டப்பகலில் நடந்த பயங்கர கொலை.. பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு

இந்தக் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக பிரமுகர் குலாம் மீது உபி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் உத்தரபிரதேச பாஜக மூத்த தலைவர் ரஹீல் ஹாசன் என்பவரின் தம்பி ஆவார்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் நடந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக பாஜக பிரமுகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ரவுடி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பார் என அனைவரும் நினைத்திருந்த நிலையில், பாஜக பிரமுகர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, இந்தக் கொலை சம்பவத்தை முன்வைத்து சமாஜ்வாதி கட்சியை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அக்கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 எம்எல்ஏ கொலை வழக்கு

எம்எல்ஏ கொலை வழக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் அடிக் அகமது (52). பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 60-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இவர் ஒருகட்டத்தில் எம்.பி.யாகவும் இதனைத் தொடர்ந்து, மேற்கு அலகாபாத் தொகுதியில் நின்று எம்.பி.யாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, கடந்த 2005-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனது தம்பியை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொடூரமாக கொலை செய்தார் அடிக் அகமது.

பட்டப்பகலில் பயங்கரம்

பட்டப்பகலில் பயங்கரம்

இந்த வழக்கில் அடிக் அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், சிறையில் இருந்தபடியே வெளியே இருக்கும் தனது ஆட்களை வைத்து கொலை, கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை அடிக் அகமது செய்து வருகிறார். இந்த சூழலில், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கொலை வழக்கில் அடிக் அகமதுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் அரசு தரப்பில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. மேலும், இந்த வழக்கில் கடைசி சாட்சியாக இருந்த உமேஷ் பாலுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை உமேஷ் பாலை மர்மநபர்கள் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றனர். அவருக்கு பாதுகாப்புக்காக இருந்த 2 போலீஸார் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர்.

சீறிய யோகி ஆதித்யநாத்

சீறிய யோகி ஆதித்யநாத்

இந்தக் கொலையானது அடிக் அகமதுவின் உத்தரவின் பேரில்தான் நடந்திருக்கும் என அனைவரும் கருதினர். இதனிடையே, உத்தரபிரதேச சட்டமன்றக் கூட்டத்தொடரில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த விவகாரத்தை முன்வைத்து பேசினார். அப்போது அவர், உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் கொலை நடக்கிறது. போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துவிட்டது" என பேசினார். இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், "இந்தக் கொலையை செய்திருப்பது அடிக் அகமது என அனைவருக்கும் தெரியும். அவர் சமாஜ்வாதியை சேர்ந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரியும்" என்றார்.

பாஜக பிரமுகர் மீது வழக்கு

பாஜக பிரமுகர் மீது வழக்கு

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக பிரமுகர் குலாம் மீது உபி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் உத்தரபிரதேச பாஜக மூத்த தலைவர் ரஹீல் ஹாசன் என்பவரின் தம்பி ஆவார். குலாமிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, குலாம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள உபி பாஜக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+