என்னது மாப்பிள்ளை தங்கத்துல செம்பு கேட்கிறாரா.. மாமியார் வீட்டினரின் மறக்கவே முடியாத கல்யாண பரிசு!
லக்னோ: திருமண நாள் என்பது புதுமாப்பிள்ளைகளுக்கு மறக்கவே முடியாததாக இருக்கும். ஏனெனில் நிறைய பரிசுகள் கிடைக்கும் நாள். இங்கு ஒரு மாப்பிள்ளைகைக்கும் மறக்க முடியாத பரிசை மணமகள் வீட்டினர் கல்யாண நாளில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் என்ன ஒன்று அவரால் சில நாட்கள் நடக்கவே முடியாது. பரிசு அவ்வளவு பலமானது.
பரிசு என்றால் பணம் அல்ல.. அடி .. சாதாரண அடி அல்ல.. அது இடிமாதிரி அடி.. அப்படி என்ன கேட்டாருன்னு இப்படி போட்டு வெளுக்குறீங்க மக்களே என்று கேட்டால், மாப்பிளை தங்க செம்பு கேட்கிறாரு சார்.. அதுவும் ஒத்தக்கால்ல நின்று கேட்கிறாரு என்று வடிவேலு பெண்ணை வரதட்சணை வாங்காமலே திருமணம் செய்த போது அடித்து வெளுப்பார்களே, அது மாதிரி தான்.. ஆனால் என்ன நிஜத்திலே மணமகனை மரத்தில் கட்டிவைத்துள்ளார்கள்.

அப்படி என்ன செய்தார் மாப்பிள்ளை என்று கேட்டால், வரதட்சணை கேட்டாரம். அதெப்படி வரதட்சணை கேட்கலாம் என்று கூறி, மணமகனை மரத்தில் கட்டி வைத்து சம்பவம் செய்திருக்கிறார்கள் மணமகள் வீட்டார். கடைசியில் போலீஸ் வந்து புதுமாப்பிள்ளையை காப்பாற்றி இருக்கிறார்கள்.
வரதட்சணை கேட்கிறதே தப்பு என்ற விஷயம் இந்த காலத்து பெண்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதேபோல் பெண்ணை பெற்றவர்களும் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்பவர்களுக்கு பெண் தருவதையே குறைத்துவிட்டார்கள். பெண்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் பல ஆண்கள் திருமணம்ஆகாமல் தவிக்கிறார்கள்
இப்படியான சூழலில் பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புகள் அதிரடியாக மாறி உள்ளது. நன்கு படித்து செட்டில் ஆகி இருக்க வேண்டும் பல ஆயிரங்களில் சம்பளம் வாங்க வேண்டும், நல்ல வேலையாக இருக்க வேண்டும், சொந்த வீடு உள்பட நல்ல வசதி வாய்ப்புகள் உள்ளவரா என்று பார்த்தே பெண் தருகிறார்கள். அந்த டாப்பிக்கிற்குள் போக வேண்டாம்.
விஷயத்திற்கு வருவோம். வரதட்சணை வாங்குவது கண்டிப்பாக தவறான விஷயம் என்பது இன்னமும் பலருக்கு தெரிந்தாலும் ஏற்கும் மனநிலையில் இல்லை. எவ்வளவு படித்தாலும் கேட்கிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதாப்கரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமர்ஜித் வர்மா என்பவருக்கு கல்யாணம் நடந்துள்ளது. கல்யாண விழாவில் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய் மாலா சடங்கின்போது, அமர்ஜித்தின் நண்பர்கள் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. என்னையா கல்யாண வீட்டில் பிரச்சனை செய்கிறீர்கள் என்று பெண் வீட்டார் கேட்டு சமாதானம் செய்ய முயன்றுள்ளார்கள்.
அப்போது மணமகன்-மணமகளின் குடும்பத்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணமகன் அமர்ஜித் வர்மா, மணமகளின் குடும்பத்தினரிடம் வரதட்சணைக் கேட்டிருக்கிறார். என்னய்யா கேட்டா.. என்று ஆத்திரப்பட்ட மணமகள் வீட்டார் பொறுமையாக பேசி இதெல்லாம் தப்பு என்று எடுத்துரைத்துள்ளார்கள். இரு வீட்டாரும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், தங்களிடம் வரதட்சணைக் கேட்ட மணமகனைச் சிறைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications