நகர்ப்புற அமைப்புகளின் வளர்ச்சியை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள்! யோகி ஆதித்யநாத் புது யோசனை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறப்பாக செயல்படும் நகர்ப்புற அமைப்புகளுக்கு ஊக்கத் தொகை அளிக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புற அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதன்படி சிறப்பாக செயல்படும் முதல் 3 நகர்ப்புற அமைப்புகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த உதவும் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த நகர்ப்புற அமைப்புகளின் தரவரிசை பல்வேறு அளவுருக்களைக் கருத்தில் கொண்டு, கண்காணிப்புக் குழுக்களால் நடத்தப்படும் விரிவான மதிப்பீடுகளின் மூலம் தீர்மானிக்கப்படும்.
முதலிடம் பிடிக்கும் நகர்ப்புற அமைப்புக்கு ரூ.2 கோடி, இரண்டாமிடத்திற்கு ரூ.1 கோடி, மூன்றாம் இடத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும். இது தவிர குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படும். கிராமப்புறங்களை மேம்படுத்துவதற்கு உ.பி அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேபோல இதனைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புறங்களை மேம்படுத்தவும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications