உ.பி. முதல்வர் ட்விட்டர் கணக்கில் யோகியின் படத்திற்கு பதிலாக குரங்கு படம்.. ஹேக்கர்கள் அட்டகாசம்
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றவர் யோகி ஆதித்யநாத். இவரது முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு இன்று அதிகாலை மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டது.
சுமார் 4 மணி நேரம் அவரது கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட நிலையில் பகுதியளவு மட்டுமே சரி செய்யப்பட்டன. இதையடுத்து முழுமையாக ட்விட்டர் கணக்கு சரி செய்யப்பட்டவுடன் ஹேக்கர்கள் பதிவு செய்திருந்த ட்வீட்டுகள் டெலிட் செய்யப்பட்டன.

சைபர் கிரைம்
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்வரின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

400 ட்வீட்டுகள்
முதல்வரின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவுடன் 400 முதல் 500 ட்வீட்டுகள் இந்த கணக்கில் பதிவு செய்யப்பட்டன. அது போல் அந்த ட்விட்டர் கணக்கில் இருந்த யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை நீக்கிய ஹேக்கர்கள் குரங்கு பொம்மை படத்தை வைத்திருந்தனர்.

குரங்கு படம்
இதையடுத்து முதல்வரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. பின்னர் அந்த ட்விட்டர் கணக்கு சரி செய்யப்பட்டு ஹேக்கர்கள் ட்வீட் செய்திருந்தவை டெலிட் செய்யப்பட்டன. யாரோ Blue Badger என்ற அக்கவுன்ட் யோகியின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளது தெரிகிறது.

ட்விட்டர் ஹேக்
முதல்வர் யோகியின் ட்விட்டர் கணக்கு அரை மணி நேரம் ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில் முதல்வரும் உ.பி. போலீஸும் ஸ்கிரீன்ஷாட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டனர். எல்லாம் சரி செய்யப்பட்டவுடன் முதல்வரின் படம் ட்விட்டரில் இடம் பெற்றது. அண்மைக்காலமாக முக்கியஸ்தர்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படுவதும் மீண்டும் சரி செய்யப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications