Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் பயங்கரம்.. ஹத்ரஸ் தலித் பெண் எரிப்பு! சந்தீப் குற்றவாளி, மூவர் நிரபராதி -உபி கோர்ட் தீர்ப்பு

காவல்துறை உயர்சாதியினருடன் சேர்ந்து இறந்த பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் இறுதிச்சடங்குகளை கூட செய்யாமல் தன்னிச்சையாக நள்ளிரவில் எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19 வயது தலித் பெண் ஒருவர் 4 பேர் கொண்ட உயர்சாதி கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள மாவட்ட நீதிமன்றம், 3 பேரை விடுதலை செய்து இருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடே கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து சற்று மீண்டு வந்துகொண்டிருந்த சமயத்தில் நாட்டையே உலுக்கும் சம்பவம் உத்தரப்பிரதேச மாநில ஹத்ரஸில் அரங்கேறியது.

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ரஸ் மாவட்டத்தின் பூல்கர்ஹி பகுதியில் 19 வயதே ஆன தலித் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த உயர்சாதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பெண் மரணம்

பெண் மரணம்

கூட்டு பலாத்காரம் செய்த கொடூரர்கள் தாக்கியதில் உடலின் பல பாகங்களில் படுகாயம் அடைந்த இளம் பெண் சஃப்தர்கஞ்ச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குற்றம் நடந்து 15 நாட்கள் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண்ணின் மரணத்துக்கு நியாயம் கேட்டு குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் உடல் எரிப்பு

நள்ளிரவில் உடல் எரிப்பு

ஆனால், காவல்துறை உயர்சாதியினருடன் சேர்ந்துகொண்டு இறந்த பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் இறுதிச்சடங்குகளை கூட செய்யாமல் தன்னிச்சையாக நள்ளிரவில் எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் போராட்டம்

நாடு முழுவதும் போராட்டம்

இதனை அடுத்து ராகுல் காந்தி உட்பட பல கட்சிகளின் தேசிய தலைவர்கள் ஹத்ரஸுக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் அரசியல் இயக்கங்கள், பெண்ணிய அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை ஹத்ரஸ் மாவட்ட பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சந்தீப் (வயது 20), ரவி (வயது 35), லுவ் குஷ் (வயது 23), ராமு (வயது 26) ஆகிய 4 பேர் இந்த கொடும் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

 குற்றவாளி என தீர்ப்பு

குற்றவாளி என தீர்ப்பு


இந்த நிலையில் ஹத்ரஸ் மாவட்ட நீதிமன்றம் 19 வயது தலித் பெண் பாலியல் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கி இருக்கிறது. அதில் 20 வயதான சந்தீப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்து இருக்கும் நீதிமன்றம், ரவி, லுவ் குஷ், ராமு ஆகியோர் நிரபராதிகள் என்று அறிவித்தது. விரைவில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சந்தீப்புக்கான தண்டனையை அறிவிப்பதாக கூறி அமர்வை நீதிபதி ஒத்திவைத்தார்.

 குடும்பத்தினர் அதிருப்தி

குடும்பத்தினர் அதிருப்தி

இந்த நிலையில் ஹத்ரஸ் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 19 வயது தலித் பெண்ணின் குடும்பம் தெரிவித்து இருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+