உ.பி கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவி.. யோகி பகீர் அறிவிப்பு!

உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீசால் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் நபர் கலவரத்தில் பலியாகிவிட்டதால் அவரின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்கி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டதா உ.பி கலவரம் ?

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீசால் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் நபர் கலவரத்தில் பலியாகிவிட்டதால் அவரின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் கலவரத்தை முன்னின்று நடத்திய நபர்களின் ஒருவனின் குடும்பத்திற்கு எதற்கு நிதி உதவி என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    நேற்று முதல்நாள் உத்தர பிரதேசத்தில் மாஹா என்ற கிராமத்தில் பசுக்காவலர்கள் பெரிய கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் பசுக்காவலர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

    கொல்லப்பட்டார்

    கொல்லப்பட்டார்

    இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி இல்லாமல் இன்னொரு நபரும் கொல்லப்பட்டார். பசுக்காவலர் படையை சேர்ந்த சுமித் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடலை கலவரம் நடந்த அன்று இரவுதான் போலீசார் மீட்டனர்.

    கலவரம் செய்தார்

    கலவரம் செய்தார்

    ஆனால் சுமித் என்று இவரும் கலவரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பஜ்ரங் தள் அமைப்பின் உறுப்பினர்களுடன் நெருக்கமாக இருக்கும் இவர் கலவரம் நடந்த அன்று கையில் கட்டைகளுடன் சுற்றி இருக்கிறார். அங்கு இவர் நிறைய வாகனங்களுக்கு தீ வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

    போலீசை தாக்கிய நபர்

    போலீசை தாக்கிய நபர்

    இவர் கலவர நாள் அன்று போலீஸ் இருவரை தாக்கி இருக்கிறார். குறிப்பிட்ட சில இளைஞர்களை முன்னின்று வழிகாட்டியது இவர்தான். இதனால் சுமித் மீது தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்து இருக்கும் 28 பேரில் இவரும் ஒருவர். ஆனால் கலவரத்தின் போது கூட்டத்தில் சிக்கி இவர் பலியாகிவிட்டார்.

    இழப்பீடு

    இழப்பீடு

    இந்த நிலையில் கலவரத்தில் உயிரிழந்த இவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை அம்மாநில அரசு வழங்கி இருக்கிறது. இதற்கான தொகையை இன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார். இந்த சம்பவம் அங்கு நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. கலவரத்தை முன்னின்று நடத்திய ஒருவரின் குடும்பத்திற்கு பணம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டு இருக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+