உ.பி. தேர்தல்: ஜாட்கள், யாதவ்கள், முஸ்லிம்கள் வாக்குகளை அலேக்காக அள்ளும் அகிலேஷ்-India TV சர்வே
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக பாஜக வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது India TV வெளியிட்டிருக்கும் கருத்து கணிப்புகள். அதேநேரத்தில் ரோகில்கண்ட் பகுதியில் பாஜகவை விட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்றும் அக்கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உ.பி. தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆட்சியைத் தக்க வைக்க பாரதிய ஜனதா கட்சி படுதீவிரமாக பிரசாரம் செய்கிறது. மத்திய அமைச்சர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு பாஜக பிரசாரம் செய்து வருகிறது. ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணி பிரசாரம் செய்து வருகிறது.

மேற்கு உ.பி. நிலவரம்
இந்நிலையில் ஜனவரி 20 முதல் ஜனவரி 25-ந் தேதி வரையிலான காலத்தில் உ.பி. தேர்தல் நிலவரம் தொடர்பாக India TV கருத்து கணிப்பு நடத்தியது. இக்கருத்து கணிப்பில் 97 தொகுதிகளைக் கொண்ட மேற்கு உ.பி.யில் பாஜக 40% வாக்குகளையும் சமாஜ்வாதி கட்சி 38% வாக்குகளையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 15%; காங்கிரஸ் 3% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாம். அதாவது பாஜகவுக்கு மேற்கு உ.பி.யில் உள்ள மொத்தம் 97 தொகுதிகளில் 58 முதல் 62 இடங்களும் சமாஜ்வாதி கட்சிக்கு 34 முதல் 38 இடங்களும் கிடைக்குமாம். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0-2 இடங்கள் மட்டுமே கிடைக்குமாம். காங்கிரஸ் மேற்கு உ.பி.யில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத நிலையில் உள்ளதாம்.

சமாஜ்வாதிக்கு ஆதரவு
மேற்கு உ.பி.யில் ஜாட்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், தலித்துகள் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். ஜாட்களில் 30% மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்; சமாஜ்வாதி கட்சி கூட்டணிக்கு 60% ஜாட்கள் ஆதரவு அளிக்கின்றனராம். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் ஜாட்கள். இருந்தபோதும் இடங்களின் அடிப்படையில் பாஜகவே அதிக எண்ணிக்கையில் வெல்ல வாய்ப்புள்ளதாம்.

ரோகில் கண்ட்டில் அகிலேஷ் வெற்றி முகம்
உ.பி.யில் ரோகில்கண்ட் பிராந்தியத்தில் மொத்தம் 52 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் சமாஜ்வாதி கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றுமாம். சமாஜ்வாதி கட்சிக்கு 28-30 இடங்களும் பாஜகவுக்கு 22-24 இடங்களும் கிடைக்கக் கூடுமாம். பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட ரோகில்கண்ட் பிராந்தியத்தில் கிடைக்காது என்கிறது இக்கருத்து கணிப்பு. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் சமாஜ்வாதி கட்சிக்கு 43%; பாஜகவுக்கு 33% ஆதரவு உள்ளதாம். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16% வாக்குகள் கிடைக்குமாம். ஆவாத் பிராந்தியத்தில் மொத்தம் 111 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 45%; சமாஜ்வாதி கட்சி 35%; பகுஜன் சமாஜ் கட்சி 12%; காங்கிரஸ் 5% வாக்குகளைப் பெறுமாம்.

யாதவ்கள், முஸ்லிம்கள் அகிலேஷுக்கு ஆதரவு
ஆவாத் பிராந்தியத்தில் பிராமணர்களில் 68% பேர் பாஜகவுக்கும் 14% பேர் சமாஜ்வாதி கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிராமணர்களில் 7% பகுஜன் சமாஜ் கட்சிக்கும் காங்கிரஸுக்கு 2% பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். யாதவர்களில் 78% பேர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியையும் 11% பேர் மட்டுமே பாஜகவையும் ஆதரிக்கின்றனராம். முஸ்லிம்களில் 77% பேர் சமாஜ்வாதி கட்சியையும் 2% பேர் மட்டுமே பாஜகவையும் ஆதரிக்கின்றனராம். முஸ்லிம்களில் 7% பேர் பகுஜன் சமாஜ் கட்சியையும் 9% பேர் காங்கிரஸையும் ஆதரிக்கின்றனர் என்கிறது India TV கருத்து கணிப்பு.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications