உ.பி.யில் 80 சதவீதம் வெற்றி எங்களுக்குத்தான்.. வாக்களித்த கையோடு.. பூரித்து பேசிய யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் இன்று வாக்களித்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத். பாஜக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என்று வாக்களித்தபின் பேட்டி அளித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 6 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக சார்பாக முதல்வர் ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 292 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துவருகிறது.

யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் எம்பியாக இருந்துள்ளார். சட்ட மேலவை மூலமாக எம்.எல்.ஏ ஆனார். ஆனால் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்எல்ஏ ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பாஜக வலுவாக இருக்கும் கோரக்பூர் தொகுதி ஆதித்யநாத் போட்டியிடுகிறார்.

வாக்குப்பதிவு
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஆறாம் கட்ட தேர்தல் 10 மாவட்டங்களில்ல் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள கன்யாநகர் ஆரம்ப பள்ளியில் தன்னுடைய வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களிப்பதற்கு முன்னதாக கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் பூஜை செய்துவிட்டு வந்து வாக்களித்தார்.

எய்ம்ஸ்
வாக்களித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார் யோகி ஆதித்யநாத். அப்போது, ''கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் பல வளர்ச்சி மாற்றங்கள் நடந்திருக்கிறது. ஏர்போர்ட் முதல் எய்ம்ஸ் கல்லூரி வரை வந்திருக்கிறது. உங்களுக்கு வளர்ச்சி வேண்டுமா அல்லது தீவிரவாதம் வேண்டுமா என நீங்கள் முடிவு செய்யுங்கள். உங்களுடைய ஒரு ஓட்டு இந்தியாவின் பொருளாதாரத்தையே மாற்றும் என்று யோசித்து வாக்கள்ளியுங்கள்.

பாஜக வெற்றி பெறும்
இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கும். 403 தொகுதிகளில் பாஜக 300க்கும் அதிகமான வெற்றிகளைப் பெற்று 80 சதவிகித வெற்றியைப் பதிவு செய்யும். இந்த வெற்றியை தடுக்க முடியாது. மக்கள் வளர்ச்சியின் பக்கம் நிற்கிறார்கள். பாஜக தொடர்ந்து மக்களின் வளர்ச்சிக்காக உழைக்கும்'' என்றார்.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications