உ.பி.யில் ஒர்க் அவுட் ஆகவில்லை பிரியங்கா வாய்ஸ்? சிங்கிள் டிஜிட்டுக்கே இந்த முறையும் போராடும் காங்.?
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இனி சிங்கிள் டிஜிட்டை கூட தாண்ட முடியாத ஒரு கட்சி என்கிற பேரழிவுக்கு செல்லும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். உத்தரப்பிரதேச மாநிலத்தை கோட்டையாக வைத்திருந்த காங்கிரஸ் இப்போது சிங்கிள் டிஜிட்டுக்கே போராடுகிற நிலைமை அவ்வளவு எளிதாக மீளக் கூடியது அல்ல என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
உத்தரப்பிரதேச தேர்தல் அரசியல் வரலாற்றை தொடர்ச்சியாக பார்த்தால் காங்கிரஸ் கட்சி இப்போது எங்கே இருக்கிறது? இனி எங்கே இருக்கிறது என்பது தெளிவாக புரிந்துவிடும். 1977-ல் எமர்ஜென்சிக்கு பின்னர் உ.பி.யில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 47 சீட்கள்தான் கிடைத்தது. முதல் முறையாக தேர்தலை எதிர்கொண்ட ஜனதா கட்சி 352 இடங்களைக் கைப்பற்றியது.
ஆனால் 1980-ல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 309 இடங்களை வி.பி.சிங் தலைமையில் அறுவடை செய்தது. சரண்சிங்கின் ஜனதா (எஸ்) 59 இடங்களைக் கைப்பற்றியது. 1985 சட்டசபை தேர்தலில் என்.டி திவாரி தலைமையில் காங்கிரஸ் 264 இடங்களைப் பெற்றது. அப்போது சரண்சிங் தலைமையிலான லோக்தள் கட்சி 84 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் முடிவுரை என்பது இங்கிருந்து தொடங்கிவிட்டது என்பதுதான் சரியான வரலாறு.

முலாயம்சிங், மாயாவதி
1989-ம் ஆண்டு உ.பி. தேர்தல் களத்தில் முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி களத்துக்கு வந்தது. அதேபோல் பாஜகவும் கணிசமான ஆதரவு பெற்ற கட்சியாக தேர்தலில் மோதியது. அப்போது சமாஜ்வாதி கட்சி 269, காங்கிரஸ் 94, பாஜக 57 இடங்களைப் பெற்றது.1991-ல் நாடு முழுவதும் காங்கிரஸ் அலை வீசிய காலத்தில் பாஜக 221 இடங்களிலும் ஜனதா தளம் 92 இடங்களிலும் காங்கிரஸ் வெறும் 46 இடங்களிலும் என 3-வது இடத்துக்குப் போனது. 1996 தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணிஅமைத்தும் அந்த அணி மொத்தம் 67 இடங்களை பெற்றது. 2002 தேர்தலில் காங்கிரஸ் 25 இடங்கள்; 2007 தேர்தலில் 22; 2012-ல் 28 இடங்கள் பெற்றது. இதன்பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு டபுள் டிஜிட் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டது.

சிங்கிள் டிஜிட் இடங்கள்
2017-ம் ஆண்டு நடைபெற்ற உ.பி. தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 7 இடங்கள்தான் என்கிற நிலை ஏற்பட்டது. தற்போதைய 2022 தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய அத்தனை கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் 6 அல்லது 7 இடங்கள்தான் என திட்டவட்டமாக கூறின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் கூட இதனையே உறுதி செய்திருக்கின்றன. ஆக உத்தரப்பிரதேசத்தில் இனி காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் கிடைக்கலாம் அல்லது அதற்கு கூட வாய்ப்பே இல்லாமல் போகலாம் என்பதையே இந்த தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

களத்தில் பிரியங்கா
1991-ல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் வலிமையான காங்கிரஸ் தலைமை இல்லை என்பது உண்மை. அதேநேரத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி என அவரது குடும்பத்தினர் தலையெடுத்தும் பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அவர்களால் உத்தரப்பிரதேசத்தில் உயிர்ப்பு தர முடியவில்லை. இதனால் பிரியங்கா காந்தியை களமிறக்கினர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக்கி பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு பிரச்சனையிலும் களமாடிப் பார்த்தார். சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளை கடுமையாக விமர்சித்தபடியே பாஜகவின் பிரதான எதிரி காங்கிரஸ் என்ற பல்லவியையும் பாடினார். ஆனால் இப்போது கூட்டணிகள் காலம் என்பதை தெளிவாக நிராகரித்துவிட்டு ஏதோ ஒரு நம்பிக்கையில் பிரியங்கா காந்தியை நம்பி காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

என்ன செய்யும் மேலிடம்?
நேரு குடும்பம், இந்திரா குடும்பம், ராஜீவ்-சோனியா குடும்பம் என்பதை இல்லாம் இப்போது துளியும் கூட நினைத்து பார்க்காதவர்களாக உத்தரப்பிரதேச வாக்காளர்கள் வெகுதொலைவு போய்விட்டனர் என்பதைத்தான் இப்போதைய களநிலவரங்கள் சொல்கின்றன. உ.பி.யில் காங்கிரஸ் இனி மீண்டெழுவது என்பது கண்ணுக்கு எட்டிய தொலைவு சாத்தியமற்றது என்பதே களநிலவரம். இதனை எப்படி சரி செய்யப் போகிறது காங்கிரஸ் மேலிடம் என்பது அக்கட்சி தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்பு.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications