லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவிஎம் ஓட்டுகளால் பாஜக வெற்றி.. தபால் ஓட்டில் 51.5% வாங்கியது சமாஜ்வாதி: அகிலேஷ் சொல்லும் கணக்கு

By
Google Oneindia Tamil News

லக்னோ: நடந்து முடிந்துள்ள உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. சமாஜ்வாதி கட்சி தோற்றுள்ளது. ஆனாலும், தபால் வாக்குகளில் 51.5% வாக்கு பெற்று முந்தி இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவிருக்கிறார்.

நான்கு முனை போட்டி நிலவினாலும், உத்தரப்பிரதேசத்தில் மோடி- யோகி அலையில் சிக்கி அத்தனை கட்சிகளும் காணாமல் போயிருக்கின்றன.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அகிலேஷ் யாதவ்? - மிகப்பெரிய முடிவுக்கு காரணம் இதுவா? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அகிலேஷ் யாதவ்? - மிகப்பெரிய முடிவுக்கு காரணம் இதுவா?

 சமாஜ்வாதி கட்சி

சமாஜ்வாதி கட்சி

முலாயம் சிங் தலைமையில் இருந்து, அகிலேஷ் யாதவ் கைகளுக்கு கட்சி சென்றதுமே மிகப்பெரிய வெற்றி பெற்று 2012ல் ஆட்சியில் அமர்ந்தது சமாஜ்வாதி கட்சி. கூட்டணிகள், குழப்பங்கள், குடும்ப ஆதிக்கம் இதெல்லாம் சமாஜ்வாதி கட்சி மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அடுத்து நடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி மோசமாக தோற்றது.

தேர்தல்

தேர்தல்

2017ல் தோற்றாலும், 2022ல் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என கணக்குபோட்டது சமாஜ்வாதி. அதற்காக யுத்திகள் வகுக்கப்பட்டு, கூட்டணிகள் உருவாக்கப்பட்டு, பல கட்சிகளில் இருந்து தலைவர்கள் அழைத்துவரப்பட்டு, பிரசாரங்கள் நடத்தப்பட்டு இந்த தேர்தலை சந்தித்தது சமாஜ்வாதி.

முடிவுகள்

முடிவுகள்

இந்த முடிவுகள் சமாஜ்வாதி கட்சி எதிர்பார்த்ததுபோல் இல்லை. கடந்த தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியை பெற்ற கட்சி, இந்த முறை ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மூறையைவிட இரண்டு மடங்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான வெற்றியைப் பெறவில்லை அகிலேஷ் தலைமையிலான கட்சி.

 தபால் வாக்குகள்

தபால் வாக்குகள்

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வந்து பல நாட்களுக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய ட்விட்டரில், ''உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு 51.5% வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதுதான் உத்தரபிரதேச உண்மையை எடுத்துக் காட்டுகிறது. மனசாட்சி படி ஓட்டுப்போட்ட அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என்னுடைய நன்றிகள்'' என பதிவிட்டுள்ளார்.

English summary
The BJP has won the Uttar Pradesh Assembly elections and is in power. The Samajwadi Party has lost. However, Akhilesh Yadav said he was ahead with 51.5% of the postal vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X