கூட்டு பாலியல் பலாத்காரம்.. ஆட்சிக்கு எதிராக கொந்தளிப்பு நடந்த ஹத்ராசில் பாஜக அமோக வெற்றி
லக்னோ: நாட்டையே கலங்க வைத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த ஹத்ராஸில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
2020 செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பட்டியலின இளம்பெண் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால், மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுகிறார்கள். ஆனாலும் அந்த பெண் சிகிச்சை பலனின்றி 2020 செப்டம்பர் 29-ம் அப்பெண் உயிரிழந்தார்.

ஹத்ராஸ்
அந்தப் பெண்ணின் இறுதி வாக்குமூலத்தில் ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த சந்தீப், லவகுஷ், ராம்குமார், ரவி ஆகியோர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார். இதையடுத்து உத்திரப்பிரதேச போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிந்து, அந்தப் பெண் வாக்குமூலத்தில் கூறிய நால்வரையும் கைது செய்தது. அந்த பெண் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, காவல் துறையினர், அந்த பெண்ணின் குடும்பத்தின் அனுமதி இன்றி, அவசர அவசரமாக பெண்ணின் உடலை நள்ளிரவில் தகனம் செய்தனர்.

வன்கொடுமை
இந்த வழக்கை விசாரித்த உத்தரப்பிரதேச ஏடிஜிபி பிரசாந்த் குமார், "தடையவியல் முடிவில் பாலியல் வன்கொடுமைக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறினார். ஹத்ராஸ் எம்.எல்.ஏ ராஜ்விர் சிங், கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு ஆண்களுக்கு ஆதரவாக, 'எங்கள் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை எதுவும் நடைபெறவில்லை' என்று தெரிவித்தார்.

சிபிஐ
இந்த வழக்கு சிபிஐ-க்கு மாறியது. வழக்கை விசாரித்த சிபிஐ 2000 பக்க அறிக்கையை சமர்பித்தது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் மீதும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302 (கொலை), பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 376 ஏ (தொடர்ச்சியான பாலியல் வன்முறைக்கு ஆளானதால் மரணத்தை ஏற்படுத்தியதற்கான தண்டனை) மற்றும் பிரிவு 376 டி (கும்பல் வன்கொடுமை) மற்றும் பிரிவு 3 (2) (பிரிவு) v) எஸ்சி / எஸ்டி ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

காங்கிரஸ்
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் களம் இறங்கியது. பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி நேரில் சென்று அந்த குடும்பத்துக்கு ஆதரவு தெரித்தனர். பெண்ணின் நீதிக்காக காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தைக் கையில் எடுத்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என போராடியது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வற்புறுத்தியது.

தேர்தல்
ஹத்ராஸ் வழக்கில், பாஜக எம்.எல்.ஏ-க்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்ததால், இந்த தேர்தலில் பாஜக அங்கு வெற்றி பெறாது என கணிக்கப்பட்டது. ஆனால், பாஜக வேட்பாளர் 57 வயதான அஞ்சுலா சிங் மஹுவார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி வேட்பாளர்களை விட 1,52,718 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் பாஜகவின் ஹரி சங்கர் மஹோர் 70,661 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார். ஆனால் இந்த தேர்தலில் ஹத்ராஸ் தொகுதியில் பாஜக ஒன்றரை லட்சம் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வீசும் பாஜக அலையில் ஹத்ராஸ் விழக்கு காணாமல் போனது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications