யோகிக்கு வாக்களிக்காதவர்கள் வீட்டை இடிப்போம்.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை.. தேர்தல் ஆணையம் அதிரடி ஆக்சன்
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் வெறுப்பை மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Recommended Video
உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே இரண்டு கட்ட சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் இன்று உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 3-வது கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
59 தொகுதிகளில் மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

என்ன பேசினார்
இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் சமீபத்தில் உத்தர பிரதேச தேர்தல் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் உத்தர பிரதேச தேர்தலில் பாஜகதான் வெற்றிபெறும். இந்துக்கள் ஆதரவு முதல்வர் ஆதித்யாநாத்திற்குதான் உள்ளது. யோகிக்கு வாக்களிக்காத மக்களின் வீடுகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்படும்., என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

பாஜக எம்எல்ஏ ராஜா சிங்
இவரின் வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த நிலையில் இவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அவரின் கருத்துக்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க கூடுதல் நேரம் கேட்டார். கூடுதலாக 24 மணி நேரம் கொடுக்கப்பட்டு, நேற்று மாலை வரை விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டது. ஆனால் கூடுதல் நேரம் கொடுத்தும் ராஜா சிங் தனது கருத்துக்கு விளக்கம் அளிக்கவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.

கூடுதல் நேரம்
இதையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ராஜா சிங் பேசிய கருத்து, முழுக்க முழுக்க தவறானது. பொறுப்பற்ற தன்மை கொண்டது. தவறான உதாரணத்தை, அழுத்தத்தை ஏற்படுத்த கூடியது.
அவர் தேர்தல் விதிகள் 171C மற்றும் 171F ஆகியவற்றை மீறிவிட்டார். இதனால் அடுத்த 72 மணி நேரங்களுக்கு இவர் பொது மேடைகளில் பேச கூடாது. செய்தியாளர் சந்திப்புகளை நடத்த கூடாது. கூட்டங்களை நடத்த கூடாது. அறிக்கைகள் வெளியிட கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதோடு இவர் மீது வழக்கு பதியும்படி இந்திய தேர்தல் ஆணையம் தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை
நேற்று மாலை 6 மணியில் இருந்து இந்த தடை அமலுக்கு வருகிறது. இவர் பேஸ்புக் விதிகளை மீறிவிட்டார் என்று கூறி கடந்த 2020 வருடம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்டா கிராமில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாஜக எம்எல்ஏ ராஜா சிங், இந்தியா வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் இவர் மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்றும் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து பேஸ்புக், இன்ஸ்டாவில் கணக்கு தொடங்குவதில் இருந்து இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications