உ.பி வேட்பாளர்களின் குற்ற பின்னணி.. சமாஜ்வாடியில் தான் அதிகம்.. பாஜக, காங்கிரஸ் எங்கு தெரியுமா
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்து நடைபெறும் 6ஆம் கட்ட தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் குற்ற விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று அங்கு 5ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான மாநிலம் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் களமிறங்கி உள்ளன. அனைத்து தலைவர்களும் அங்குத் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம்
அங்கு பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிகளுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரு கட்சிகளைத் தவிரவும் பகுஜன் சமாஜ், காங்கிரஸ், மஜ்லீஸ் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கி உள்ளனர். அடுத்து வரும் மார்ச் 3ஆம் தேதி 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வடகிழப்பு உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மொத்தம் 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கட்சிகளைத் தேர்ந்த மொத்தம் 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ரெட் அலர்ட் தொகுதிகள்
இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் சுய விவரங்களைக் கொண்ட பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 10% பேர், அதாவது 65 வேட்பாளர்கள் பெண்கள் என கூறப்பட்டு உள்ளது. மேலும், 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 57 தொகுதிகளில் மொத்தம் 37 தொகுதிகள் (65%) ரெட் அலர்ட் தொகுதிகள் என அறிவித்துள்ளனர்.அதாவது இந்தத் தொகுதிகளில் குற்றப் பின்னணி கொண்ட குறைந்தது 3 பேர் போட்டியிடுகின்றனர்.

குற்ற பின்னணி
உ.பி-இல் 6ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 670 வேட்பாளர்களில், 182 (27%) வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக 151 (23%) பேர் தங்களுக்கு எதிராகக் கடுமையான கிரமினல் வழக்குகள் உள்ளதைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 8 வேட்பாளர்கள் பெண்கள் மீதான குற்றங்களை உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 2 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளனர்.

கட்சி வாரியாக
கட்சி வாரியாக பார்க்கும் போது சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர்களில் 40 பேர், பாஜக வேட்பாளர்களில் 23 பேர். காங்கிரஸ் வேட்பாளர்களில் 22 பேர், பகுஜன் சமாஜ் கட்சிகளில் 22 பேர், ஆம் ஆத்மி கட்சியில் 7 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. கடுமையான குற்ற வழக்குகளைப் பொருத்தவரை சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களில் 29 பேர் மீதும், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளைச் சேர்ந்த தலா 20 பேர் மீது, பகுஜன் சமாஜ்ஜின் 18 பேர் மீதும் ஆம் ஆத்மியின் 5 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன.

கோடீஸ்வரர்கள்
அதேபோல 8 பேர் மீது கொலை தொடர்பான வழக்கும், 23 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளனர். மேலும், தேர்தலில் போட்டியிடுபவர்களில் 253 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ 2.10 கோடியாகும். "அங்கு முக்கிய கட்சிகளில் இருந்து போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் தான். சமாஜ்வாடி (45 வேட்பாளர்கள்), பாஜக (42 வேட்பாளர்கள்), பகுஜன் சமாஜ் (44 வேட்பாளர்கள்), காங்கிரஸ் (26 வேட்பாளர்கள்), ஆம் ஆத்மி (14 வேட்பாளர்கள்) கோடீஸ்வரர்கள் ஆவர்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications