Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி: முதல் கட்டமாக 58 தொகுதிகளில் அமைதியாக தேர்தல்- மாலை 6 மணி வரை 57.79% வாக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக இன்று காலை 7 மணிக்கு 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அந்த நேரம் வரை மொத்தம் 57.79% வாக்குகள் பதிவாகி உள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

UP First Phase voting begin from 7 am for 58 seats

இன்று முதல் கட்டமாக மேற்கு உ.பி.யின் 11 மாவட்டங்களில் 58 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. காலை 9.30 மணிவரை 7.95% வாக்குகள் பதிவாகின. பின்னர் முற்பகல் 11 மணிவரை 20.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. பிற்பகல் 1 மணிவரை 35.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. 3 மணி நிலவரப்படி 48 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

மாலை 4 மணி நிலவரப்படி 48.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அது போல் 5 மணி நிலவரப்படி 55.31 சதவீதம் பதிவாகியிருந்தன. மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது. அப்போது 57.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

முதல் கட்ட தேர்தலில் சுமார் 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட வாக்குப் பதிவு 25,849 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் களத்தில் மொத்தம் 623 வேட்பாளர்கள் உள்ளனர்.

உ.பி. பாஜக அமைச்சர்கள் ஶ்ரீகாந்த் ஷர்மா, சுரேஷ் ராணா, சந்தீப் சிங், கபில்தேவ் அகர்வால், அதுல் கார், சவுத்ரி லஷ்மி நாரெய்ன் உள்ளிட்டோர் முதல் கட்ட தேர்தலில் முக்கியமான வேட்பாளர்கள். இத்தேர்தல் பாதுகாப்புக்காக 50,000 துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற மேற்கு உ.பி.யில் ஜாட், முஸ்லிம்கள், தலித்துகள் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். 2013-ல் மத மோதல் நடைபெற்ற முசாபர்நகரும் மேற்கு உ.பி.யில் உள்ளடங்குகிறது.

மாலை 6 மணி வரையிலான வாக்குப் பதிவு நிலவரம்:

  • அலிகார்- 57.25%
  • ஆக்ரா- 56.52%
  • புலந்தசாகர்- 60.57%
  • கவுதம்புத்தா நகர்- 53.28%
  • காசியாபாத்- 52.34%
  • ஹாப்பூர்- 60.53%
  • மதுரா- 58.12%
  • மீரட்- 58.23%
  • முசாபர்நகர் - 62.09%
  • ஷாமிலி- 61.75%

உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்கு முனை போட்டி நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 58 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள்:

வ.எண் தொகுதி வேட்பாளர் பெயர்
சமாஜ்வாதி பாஜக காங்கிரஸ் பகுஜன் சமாஜ்
1 கைரானா நஹித் ஹசன் மிரிகங்கா சிங் ஹாஜி அக்லாக் ராஜேந்திர சிங் உபாத்யாய்
2 தானா பவன் அஷ்ரப் அலி சுரேஷ் ராணா சத்யா சய்யம் சைனி ஜாகீர் மாலிக்
3 ஷாம்லி பிரசன்ன சவுத்ரி தேஜேந்திர சிங் நிர்வால் முகமது அயூப் ஜங் பிரிஜேந்திர மாலிக்
4 புதானா ராஜ்பால் பலியன் உமேஷ் மாலிக் தேவேந்திர காஷ்யப் ஹாஜி முகமது அனிஷ்
5 சார்தவால் பங்கஜ் கே.ஆர். மாலிக் சப்னா காஷ்யப் டாக்டர். யாஸ்மீன் ராணா சல்மான் சயீத்
6 புர்காசி (ரிசர்வ்) அனில் குமார் பிரமோத் உத்வால் தீபக் குமார் சுரேந்திர பால் சிங்
7 முஸாப்பர்நகர் சௌரப் கபில் தேவ் அகர்வால் சுபோத் சர்மா புஷ்பங்கர் பால்
8 கத்தவ்லி ராஜ்பால் சிங் சைனி விக்ரம் சைனி கௌரவ் பதி கர்தார் சிங் பதனா
9 மீராப்பூர் சந்தன் சவுகான் பிரசாந்த் குர்ஜார் மௌலானா ஜமீல் க்காஸ்மி முகமது சலீம்
10 சிவல்கஸ் குலாம் முகமது மனேந்திர பால் சிங் ஜகதீஷ் சர்மா நன்ஹே கான்
11 ஷ‌ர்தனா அதுல் சங்கீத் சோம் சையத் ரியானுதீன் சஞ்சீவ் குமார் தாமா
12 ஹஸ்தினாபூர் (ரிசர்வ்) யோகேஷ் வெர்மா தினேஷ் கதிக் அர்ச்சனா கவுதம் சஞ்சீவ் கே.ஆர். ஜாதவ்
13 கித்தோர் ஷாஹித் மஞ்சூர் சத்யவீர் தியாகி பபிதா குர்ஜர் குஷால் பால் மாவி
14 மீரட் கண்ட் மனிஷா அஹ்லாவத் அமித் அகர்வால் அவனிஷ் கஜாலா அமித் சர்மா
15 மீரட் ரஃபிக் அன்சாரி கமல் தத் சர்மா ரஞ்சன் சர்மா முகமது தில்ஷத்
16 மீரட் தெற்கு முகமது அடில் சோமேந்திர டோமர் நஃபீஸ் சைஃபி குன்வர் தில்ஷத் அலி
17 சப்ரவ்வுளி அஜய் குமார் சஹேந்திர சிங் ரம்லா டாக்டர் யூனுஸ் சவுத்ரி ...
18 பரெள‌த் ஜெய்வீர் சிங் டோமர் கிருஷ்ணபால் சிங் மாலிக் ராகுல் காஷ்யப் அங்கித் சர்மா
19 பாக்பத் அஹ்மத் ஹமீத் யோகேஷ் தாமா அனில் தேவ் தியாகி அருண் கசானா
20 லோனி மதன் பையா நந்த்கிஷோர் குர்ஜர் யாமீன் மாலிக் ஹாஜி ஆகில் சவுத்ரி
21 முராத்நகர் சுரேந்திர குமார் அஜித் பால் தியாகி பிஜேந்திர யாதவ் ஹாஜி அய்யூப் இத்ரிஷி
22 ஷாஹிபாபாத் அமர்பால் சுனில் சர்மா சங்கீதா தியாகி அஜீத் கே.ஆர். பால்
23 காஸியாபாத் விஷால் வெர்மா அதுல் கார்க் சூஷன் கோயல் கிருஷ்ண குமார் சுக்லா
24 மோடி நகர் சுதேஷ் சர்மா மஞ்சு சிவாச் நீரஜ் குமாரி டாக்டர் பூனம் கர்க்
25 தௌலானா அஸ்லாம் அலி தர்மேஷ் டோமர் அரவிந்த் சர்மா வாசித் பிரதான்
26 ஹபூர் (ரிசர்வ்) கஜ்ராஜ் சிங் விஜய் பால் ஆட்தி பாவனா வால்மீகி மனிஷ் கே.ஆர். மோனு
27 கர்முக்டேஷ்வர் ரவீந்திர சவுத்ரி ஹரேந்திர சவுத்ரி அப்ஹா சௌத்ரி மதன் சௌஹான்
28 நொய்டா சுனில் சவுத்ரி பங்கஜ் சிங் பன்குரி பதக் கிரிபரம் சர்மா
29 தாத்ரி ராஜ்குமார் தேஜ்பால் சிங் நகர் தீபக் பாதி சோட்டிவாலா மன்வீர் சிங் பாதி
30 ஜேவார் அவ்தார் சிங் பதானா திரேந்திர சிங் மனோஜ் சவுத்ரி நரேந்திர பாதி தாதா
31 சிக்கந்த்ராபாத் ராகுல் யாதவ் லக்ஷ்மிராஜ் சிங் சலீம் அக்தர் சௌத்ரி மன்வீர் சிங்
32 புலந்த்ஷஹர் ஹாஜி யூனுஸ் பிரதீப் சவுத்ரி சுஷில் சவுத்ரி மொபின் கல்லு குரைஷி
33 சைய‌னா தில்நவாஜ் கான் தேவேந்திர சிங் லோதி பூனம் பண்டிட் சுனில் பரத்வாஜ்
34 அனுப்ஷஹர் கே.கே சர்மா சஞ்சய் ஷர்மா சவுத்ரி கஜேந்திரா ராமேஷ்வர் சிங் லோதி
35 தேபாய் ஹரிஷ் குமார் சி பி சிங் சுனிதா சர்மா கரண் பால் சிங்
36 ஷிகர்பூர் கிரண் பால் சிங் அனில் சர்மா ஷியாவுர் ரஹ்மான் முகமது ரஃபிக்
37 குர்ஜா (ரிசர்வ்) பன்ஷி சிங் மீனாட்சி சிங் துக்கி மால் காதிக் வினோத் குமார் ஜாதவ்
38 கைர் (ரிசர்வ்) பகவதி சூர்யவன்ஷி அனூப் பால்மிகி மோனிகா சூர்யவன்ஷி சாருகென் கென்
39 பாரௌலி பிரமோத் கவுர் தாக்கூர் ஜெய்வீர் சிங் கௌரங் தேவ் சவுகான் நரேந்திர ஷர்மா
40 அட்ரெளலி வீரேஷ் யாதவ் சந்தீப் சிங் தர்மேந்திர குமார் டாக்டர் ஓம்வீர் சிங்
41 ச்ச‌ர்ரா லக்ஷ்மி தங்கர் ரவேந்திர பால் சிங் அகிலேஷ் சர்மா திலக் ராஜ் யாதவ்
42 கோயில் ஷாஸ் இஷாக் அனில் பராஷர் விவேக் பன்சால் முகமது பிலால்
43 அலிகர் ஜாபர் ஆலம் முக்தா ராஜா முகமது சல்மான் இம்தியாஸ் ரசியா கான்
44 இக்லஸ் (ரிசர்வ்) பீர்பால் சிங் திவாகர் ராஜ்குமார் சஹ்யோகி ப்ரீத்தி தங்கர் சுஷில் கே.ஆர் ஜாதவ்
45 ச்சட்டா தேஜ்பால் சிங் லக்ஷ்மி நாராயண் பூனம் தேவி சோன்பால் சிங்
46 மன்ட் சஞ்சய் லதர் ராஜேஷ் சவுத்ரி சுமன் சவுத்ரி ஷியாம் சுந்தர் சர்மா
47 கோவர்தன் ப்ரீதம் சிங் மெக்ஷ்யாம் சிங் தீபக் சவுத்ரி ராஜ் குமார் ராவத்
48 மதுரா தேவேந்திர அகர்வால் ஸ்ரீகாந்த் ஷர்மா பிரதீப் மாத்தூர் சதீஷ் கே.ஆர் சர்மா
49 பல்தேவ் (ரிசர்வ்) பபிதா தேவி பூரன் பிரகாஷ் ஜாதவ் வினேஷ் குமார் அசோக் கே.ஆர் சுமன்
50 எத்மட்பூர் டாக்டர் வீரேந்திர சிங் தரம்பால் சிங் ஷிவானி சிங் பாகேல் சர்வேஷ் பாகேல்
51 ஆக்ரா கண்ட். (ரிசர்வ்) குன்வர் சந்த் ஜி.எஸ் தர்மேஷ் சிக்கந்தர் வால்மீகி பர்தேந்து அருண்
52 ஆக்ரா தெற்கு வினய் அகர்வால் யோகேந்திர உபாத்யாயா அனுஜ் சர்மா ரவி பரத்வாஜ்
53 ஆக்ரா வடக்கு ஞானேந்திரா புருஷோத்தம் கந்தேல்வால் வினோத் கே.ஆர். பன்சால் ஷபீர் அப்பாஸ்
54 ஆக்ரா ரூரல் (ரிசர்வ்) மகேஷ் குமார் ஜாதவ் பேபி ராணி மௌரியா உபேந்திர சிங் கிரண் பிரபா கேசரி
55 ஃபதேபூர் சிக்ரி பிரிஜேஷ் சாஹர் சௌத்ரி பாபுலால் ஹேமந்த் சாஹர் டாக்டர் முகேஷ் கே.ஆர் ராஜ்புத்
56 கெரகர்க் ரௌத்தன் சிங் பகவான் குஷ்வாஹா ராம்நாத் ஷிகர்வார் கங்காதர் குஷ்வாஹா
57 ஃபதேஹாபாத் ரூபாலி தீட்சித் சோடேலால் வெர்மா ஹோதம் சிங் நிஷத் சைலேந்திர பிரதாப் சிங்
58 பாஹ் மதுசூதன் ஷர்மா ராணி பக்ஷலிகா மனோஜ் தீட்சித் நிதின் வெர்மா
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+