மனைவிக்காக உ.பியில் தாஜ்மஹால் கட்டிய நபர்.. முழு கட்டிடம் கட்டும் முன் விபத்தில் பலியான பரிதாபம்!
தனது மனைவிக்காக தாஜ்மஹால் கட்டிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் அந்த கட்டிடம் முழுதாக கட்டி முடிக்கும் முன்பே விபத்தில் மரணம் அடைந்தும் இருக்கிறார்.
லக்னோ: தனது மனைவிக்காக தாஜ்மஹால் கட்டிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் அந்த கட்டிடம் முழுதாக கட்டி முடிக்கும் முன்பே விபத்தில் மரணம் அடைந்தும் இருக்கிறார்.
உத்தர பிரதேசத்தின் கேசன் கலான் பகுதியை சேர்ந்தவர் பைசல் ஹாசன் ஹதாரி. 83 வயதான இவரும் தாஜா முள்ளி பிபி என்ற பெண்ணும் 1953ல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தாஜா முள்ளி பிபி 90 களில் மரணம் அடைந்துவிட்டார். இதை தாங்கி கொள்ள முடியாத கணவர் பைசல் அந்த பெண்ணுக்கு தாஜ்மஹால் கட்ட திட்டமிட்டுள்ளார்.

பாதி கட்டிவிட்டார்
இதற்காக காசு சேர்க்க தொடங்கியவர் 2 லட்சம் ரூபாய் வரை சேர்த்துள்ளார். 2012ல் கட்டிட வேலையை தொடங்கி உள்ளார். கடந்த மாதம் வரை 70 சதவிகித கட்டிட பணிகள் முடிந்து இருக்கிறது. இன்னும் ஒரு பக்க கட்டிட வேலைகள் மட்டும் பாக்கி இருக்கிறது. அடுத்த வருட தொடக்கத்தில் இதை திறக்கும் எண்ணத்தில் இருந்துள்ளார்.

உதவியை மறுத்தார்
இடையில் இந்த கட்டிட பணிகள் பாதியில் நின்ற போது அப்போது அம்மாநில முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் இவருக்கு உதவ முன்வந்துள்ளார். ஆனால் என் மனைவிக்கு நான்தான் தாஜ்மஹால் கட்டுவேன் என்று இவர் மறுத்துவிட்டு, அதை வைத்து எங்கள் ஊரில் பெண்கள் கல்லூரி காட்டுங்கள் என்றுள்ளார். அந்த பெண்கள் கல்லூரி தற்போது அந்த கிராமத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதற்கு இவரும் கொஞ்சம் நிதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்துவிட்டார்
இந்த நிலையில்தான் நேற்று இவர் வீட்டிற்கு திரும்பும் வழியில் கார் மோதி மரணம் அடைந்தார். இவரை வேகமாக மோதிய கார், நிற்காமல் சென்று இருக்கிறது. இந்த விபத்தில் இவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.

உறவினர்கள் என்ன செய்யபோகிறார்கள்
இவர் எழுப்ப திட்டமிட்டு இருந் தாஜ்மஹால் தற்போது பாதியில் நிற்கிறது. இவரின் உறவினர்கள், இந்த வேலையை முடித்து தாஜ்மஹாலை திறக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். தாஜ்மஹாலில் ஷாஜகான் உடலும் மும்தாஜ் உடலும் அருகருகே இருப்பதை போலவே பைசல் உடலையும் அவரின் மனைவியின் உடலுக்கு அருகே இங்கு புதைக்க திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications