லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஷீத் கானாக மாறிய விகாஷ் குமார்.. ஷ்ரத்தா கொலையை ஆதரித்து வீடியோ! அம்பலப்படுத்திய உபி போலீஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை 35 துண்டுக்காக வெட்டி ஆப்தாப் கொலை செய்ததற்கு ரஷீத் கான் என்ற பெயரில் ஆதரவு தெரிவித்து பேசியவரை கைது செய்த உத்தரப்பிரதேச காவல்துறை அவரது உண்மை பெயர் விகாஷ் குமார் என தெரிவித்து உள்ளார்கள்.

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் ஆப்தாப் பூனாவாலா பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது.

டெல்லியில் ஒன்றாக வசித்து வந்த ஆப்தாப் பூனாவாலா - ஷ்ரத்தா வாக்கர் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சச்சரவுகள் தொடர்ந்து இருக்கின்றன. ஆப்தாப் இதற்காக ஷ்ரத்தா வாக்கரை பல வகைகளில் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அடிமை பாகிஸ்தான் அரசு.. இந்தியாதான் “கெத்து” - மோடி அரசின் துணிச்சல்! புகழ்ந்து தள்ளிய இம்ரான் கான் அடிமை பாகிஸ்தான் அரசு.. இந்தியாதான் “கெத்து” - மோடி அரசின் துணிச்சல்! புகழ்ந்து தள்ளிய இம்ரான் கான்

 துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா

துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா

கடந்த மே மாதம் டெல்லியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஆப்தாப், ஷ்ரத்தாவை தாக்கி கொடூரமாக கொலை செய்து உள்ளதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதிலிருந்து தப்பிக்க ஷ்ரத்தாவின் உடலை ஆப்தாப் 35 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 ஃப்ரிட்ஜில் உடல் பாகங்கள்

ஃப்ரிட்ஜில் உடல் பாகங்கள்

வீசப்படாமல் மீதம் இருந்த துண்டுகளில் இருந்து துர்நாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஃப்ரிட்ஜ் ஒன்றை எடுத்து வந்த ஆப்தாப் அதில் வைத்து பாதுகாத்து வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. கடந்த 6 மாதங்களாக யாரிடமும் சிக்காமல் ஆப்தான் இருந்து வந்த நிலையில், ஷ்ரத்தாவின் தந்தை தனது மகளை காணவில்லை என புகாரளித்தார்.

 ஆப்தாப் விளக்கம்

ஆப்தாப் விளக்கம்

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆப்தாபை கைது செய்த போலீசாரிடம் அவர் தெரிவித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தன. தற்போது ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கோபத்தில் என்ன செய்வதென்று அறியாமல் ஷ்ரத்தாவை கொன்றுவிட்டேன் என ஆப்தாப் தெரிவித்துள்ளார்.

 2 ஆண்டுக்கு முன்பே புகார்

2 ஆண்டுக்கு முன்பே புகார்

இதற்கிடையே ஆப்தாப் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஷ்ரத்தா மகாராஷ்டிரா மாநிலம் துலிஞ்ச் காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார். அதில், "இன்று அவன் என்னை கொலை செய்ய முயற்சி செய்தான். கொலை செய்துவிடுவேன் என மிரட்டினான்.

 கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

பல துண்டுகளாக வெட்டி வீசிவிடுவேன் என்று கூறினான். கடந்த 6 மாதம் முன்பாகவும் அவன் இதேபோல் என்னை தாக்கினான். ஆனால், அப்போது எனக்கு காவல் நிலையம் வந்து புகார் கொடுப்பதற்கான தைரியமே இல்லை. அவன் என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததால் நான் அஞ்சினேன்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 ஆதரித்து வீடியோ

ஆதரித்து வீடியோ

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாவில், ரஷீத் கான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஷ்ரத்தா வாக்கர் கொலையை நியாயப்படுத்தும் வகையில் அதை ஆதரித்து பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

 விகாஷ் குமார்

விகாஷ் குமார்

இந்த நிலையில் புலந்த்ஷா போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை பெயர் ரஷீத் கான் இல்லை என்றும், விகாஷ் குமார் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விகாஷ் குமார் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Uttar pradesh police had arrested Vikas Kumar from Bulandsahr. He renamed as Rashid khan and supported Shraddha walkers murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X