“ஆதாரம்” இல்லையாம்.. வீட்டில் தொழுததாக புகார்! முஸ்லிம்கள் மீதான வழக்கை ரத்து செய்த உபி போலீஸ்
லக்னோ: வீட்டில் முன்னறிவிப்பு இன்றி கூட்டாக தொழுகை நடத்தியதாக கூறி 26 இஸ்லாமியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உத்தரப்பிரதேச காவல்துறை ரத்து செய்து இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சாஜ்லெட் பகுதியில் உள்ள துல்ஹேபூர் கிராமத்தில் உள்ள வீட்டில் முஸ்லிம்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சந்திரபால் சிங் என்ற நபர் காவல்துறையிடம் புகாரளித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில், அடையாளம் தெரியாத 16 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் என மொத்தம் 26 பேர் மீது காவல்துறையினர் மதவழிபாட்டில் ஈடுபடுவதாக மக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

லுலு மால்
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்ட லுலு மாலில் இஸ்லாமியர்கள் சிலர் தொழுகை நடத்தியதாக கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச போலீசாரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலர் கேள்வி
பொது இடத்தில் மத வழிபாடுகளில் ஈடுபடுவது தவறு என்று உத்தரப்பிரதேச காவல்துறையும் பாஜகவினரும் விளக்கமளித்தனர். இந்த நிலையில் வீட்டில் மத வழிபாட்டில் ஈடுபடுவதும் தவறா என்று பலரும் என்று கேள்வி எழுப்பி பலரும் உத்தரப்பிரதேச காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர்.

உமர் அப்துல்லா கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "அண்டை வீட்டாரில் ஒருவர் தனது 26 நண்பர்களுடன் சேர்ந்து பூஜை செய்து இருந்தால் அது சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும். கூட்டம் சேர்ந்தது பிரச்சனை இல்லை. தொழுகை நடத்தினார்கள் என்பதே பிரச்சனை." என்று தெரிவித்தார்.

ஒவைசி கேள்வி
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐதராபாத் எம்.பியும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசி, "தொழுகையை எங்கு வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டது. பின்னர் ஏன் வீட்டில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? இது அநீதி." என்றார்.

வழக்கு வாபஸ்
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக உத்தரப்பிரதேச காவல்துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் ஹேமந்த் குடியால், இந்தி நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் 26 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளோம்." என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications