"எனக்கு நைட் ட்யூட்டிதான் வேணும்".. அடம்பிடித்த 'சின்சியர்' போலீஸ்! காரணத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இரவு நேரம் வந்ததும் திருடனாக அவதாரம் எடுத்து பல இடங்களில் கைவரிசை காட்டி வந்த காவலர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டை தடுத்து சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய போலீஸ் காவலரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடம், இதுவரை எங்கெங்கு என்னென்ன பொருட்களை திருடினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசாங்க சம்பளம் எதற்கு..?

அரசாங்க சம்பளம் எதற்கு..?

எந்தவொரு குற்றத்தையும் மன்னித்து விடலாம்; ஆனால் நம்பிக்கை துரோகத்தை மட்டும் மன்னிக்கக் கூடாது என பொதுவாக சொல்லப்படுவது உண்டு. இது தனிநபர்களுக்கு இடையேயான பிரச்சினையில் மட்டுமல்லை; அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியே லஞ்சம் வாங்குவது; வருமான வரித்துறை அதிகாரியே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது போன்றவையும் இதில் அடங்கும். அதிலும் முக்கியமாக மக்களையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பேன் என உறுதிமொழி எடுத்து, அதற்காக அரசாங்க சம்பளமும் பெறும் போலீஸார், குற்றவாளிகளுக்கும் துணைப் போவதும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் என்னவென்று சொல்வது? சமீபகாலமாக, நாடு முழுவதும் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் சில போலீஸார் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

தீவிர ரோந்து..

தீவிர ரோந்து..

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மகாராஜபூரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருட்டுச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்துள்ளன. இதுகுறித்து தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து புகார்களும் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து, இந்த திருட்டுச் சம்பவங்களை தடுப்பதற்கும், கொள்ளையர்களை பிடிப்பதற்கும் அங்கு ரோந்துப் பணியை போலீஸார் அதிகப்படுத்தினர்.

புது திருட்டுகள் அதிகம்..

புது திருட்டுகள் அதிகம்..

போலீஸாரின் ரோந்து அதிகமானதால் அந்தப் பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிப்பது; வழிப்பறி செய்வது போன்ற குற்றச்சம்பவங்கள் கணிசமாக குறைந்தன. அதே வேளையில், சிறு சிறு திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின. வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்கள் திடீரென காணாமல் போவது; பைக்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல்கள் திருடுப் போவது, செல்போன்கள் மாயாவது போன்ற சம்பவங்கள் அதிகரித்தன. சிறிய திருட்டு என்பதால் இதுதொடர்பாக போலீஸாரிடம் யாரும் முறைப்படி புகார் அளிக்காமல் இருந்தனர். ஆனால், போலீஸார் ரோந்துக்கு செல்லும் போது எப்படி இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன என்பது போலீஸாருக்கு புரியாத புதிராக இருந்தது.

'நைட் ட்யூட்டி' கேட்டு அடம்..

'நைட் ட்யூட்டி' கேட்டு அடம்..

இதனிடையே, மகாராஜாபூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் ப்ரகேஷ் சிங் என்பவர் தனக்கு இரவுப் பணி தான் வேண்டும் என தினமும் அடம்பிடித்து கேட்டு வாங்கினார். முதலில் அவரது சின்சியாரிட்டியை கண்டு வியந்த உயரதிகாரிகளுக்கு, நாளாக நாளாக அவர் மீது சந்தேகம் வரத் தொடங்கியது. ஆனால், இதுகுறித்து அவரிடம் சொல்லாமல் போலீஸார் ரகசியமாக அவரை கண்காணிக்க முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த வாரம் அந்தப் பகுதியில் பகல் நேரத்தில் ஒரு மறைவான இடத்தில் சிசிடிவி கேமராவை போலீஸார் பொருத்தினர்.

சிக்கிய 'சில்வண்டு'

சிக்கிய 'சில்வண்டு'

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த சிசிடி காட்சிகளை பார்த்த போது, சின்சியர் நைட் டியூட்டி காவலர் ப்ரகேஷ் சிங், அங்கிருந்த ஒரு கடைக்கு வெளியே படுத்துக் கொண்டிருந்த இளைஞரின் பாக்கெட்டில் இருந்து விலை உயர்ந்த செல்போனை திருடியது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, போலீஸார் நேற்று அவரை கைது செய்தனர். இன்னும் எங்கெங்கு என்னென்ன பொருட்களை அவர் அபேஸ் செய்திருக்கிறார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+