ஹத்ராஸ் சோகம்.. உயிரிழப்பு 131ஆக உயர்வு! போலோ பாபா சாமியாரை காப்பாற்றுகிறதா உ.பி போலீஸ்?
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 131ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது நிகழ்ச்சி நடந்த இடத்தில் சாமியார் போலோ பாபா இருக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உ.பியின் பிரபல சாமியாராக வலம் வருபவர்தான் போலோ பாபா. இவர் நேற்று ஹத்ராஸ் நகரில் ஆன்மீக சொற்பொழிவை நடத்த திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக அறிவிப்பும் வெளியானது. இவரது உரையை கேட்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். ஆனால், இவ்வளவு பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இப்படி இருக்கையில் நிகழ்ச்சி முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நெரிசலில் சிக்கிய பலர் திடீரென மயங்கி விழுந்தனர். ஆனால், அவர்களை மீட்காத சக பக்தர்கள் அவர்கள் மீது ஏறி நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து வெளியே வந்தனர். இதனால் 30 பேர் வரை உயிரிழந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேரம் செல்ல செல்ல இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கியது. நேற்றிரவு வரை சுமார் 100 பக்தர்கள் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி இந்த எண்ணிக்க 131ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை மோசமாக இருப்பதால் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது வரை உயிரிழந்தவர்களில் 72 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தின் துயரம் ஒருபுறம் இருந்தாலும், காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று உ.பி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் வசதி இல்லை என்றும், மருத்துவமனை வளாகத்தில் பக்தர்களின் உடல்கள் குப்பைகளை போல போடப்பட்டிருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரமதர் மோடி உட்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். அதேபோல இன்று ஹத்ராஸில் விபத்து நடந்த இடத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செல்கிறார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. உதவி ஆட்சியர்தான் அனுமதி கொடுத்திருப்பதாகவும், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மறுபுறத்தில், விபத்து நடந்த இடத்தில் சாமியார் போலோ பாபா இருக்கவில்லை என போலீஸ் எஸ்பி தெரிவித்திருக்கிறார்.
இவர் இவ்வாறு கூறுவதன் மூலம், சாமியாரை தப்பிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications