இப்படியும் ஒரு இன்ஸ்பெக்டர்.. புகார் கொடுக்க வந்த பெண் டான்ஸரை உட்கார வைத்து.. ரொம்ப கொடுமை!
பெண்ணை டான்ஸ் ஆட வைத்து தொல்லை தந்துள்ளார் இன்ஸ்பெக்டர்
லக்னோ: 'முதல்ல என் முன்னாடி டான்ஸ் ஆடு.. அப்பறம் நீ பேசறதை கேட்கறேன்" என்று ஸ்டேஷனுக்கு புகார் தர வந்த டான்சரை படாத பாடு பட வைத்துவிட்டார் ஒரு இன்ஸ்பெக்டர்!
உத்தர பிரதேசத்தில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள், வகை வகையான அநியாயங்கள் என பெருகி பெருகி வருகிறது.
இதில் சில காவல்துறை அதிகாரிகளே ஈடுபட்டு வருவது வேதனையையும் எரிச்சலையும் தருகிறது.. கடந்த மாதம் டியொரியா என்ற மாவட்டத்தில் ரொம்ப கேவலமான ஒரு சம்பவம் நடந்தது.. பாட்னா என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்தது.. அதனால் பாட்னா ஸ்டேஷனுக்கு இந்த விவகாரம் தொடர்பாக புகார் தர சென்றார்.

பாலியல் தொல்லை
அங்கே இருந்த ஒரு இன்ஸ்பெக்டர், தன்னுடைய அந்தரங்க பகுதியில் கையை வைத்து, அசிங்கமான செய்கைகளை செய்து அந்த பெண் முன்னாடியே செய்து, பாலியல் தொல்லை தந்தார்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வீடியோவாக எடுத்து அதை மேலிடத்தில் அனுப்பி வைத்தார்.. பிறகு அந்த இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டான்ஸர்
எனினும் அதுபோலவே பல சம்பவங்கள் தொடர்ந்து அதே உபியில் நடந்து வருகிறது.. கான்பூர் கோவிந்த் நகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் அந்த பெண்.. இவரது பெற்றோர் ஜாக்ரான் விருந்து ஏற்பாடு செய்து சம்பாதித்து வருகின்றனர்... இந்த பார்ட்டிகளில் டான்ஸ் ஆடுபவர்தான் அந்த இதுதான் அந்த குடும்பத்துக்கு வருமானம்.

வாடகை
தற்போது லாக்டவுன் என்பதால் வருமானம் இல்லாமல் போயிற்று.. கையில் காசு இல்லாததால், வீட்டு வாடகையை சென்ற மாசம் செலுத்த முடியாமல் போயுள்ளது... ஆனால் ஹவுஸ் ஓனரோ வாடகையை எடுத்துவை என்று விடாப்பிடியாக நின்றிருக்கிறார்.

வறுமை
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த ஹவுஸ் ஓனர், வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டிவிட்டு, உள்ளே இருந்த பொருட்களையும் தூக்கி தெருவில் வீசியுள்ளார்.. ஏற்கனவே பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்த அந்த பெண், இந்த நடவடிக்கையில் மனம் வெதும்பி போனார்.. அதனால் இதை பற்றி புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.

எப்ஐஆர்
கையில் ஒரு புகார் மனுவையும் எழுதி கொண்டு போயிருந்தார்.. அங்கே ஒரு இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருந்தார்.. அவரிடம் நடந்ததை கண்ணீருடன் சொன்னார் இந்த பெண்.. ஆனால், அதைஎல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்த இன்ஸ்பெக்டர், "சரி.. நீதான் டான்ஸர் ஆச்சே.. என் முன்னாடி ஒரு டான்ஸ் ஆடு.. அப்படி டான்ஸ் ஆடினால்தான் உன் புகாரை எடுத்துப்பேன்.. எப்ஐஆர் போடுவேன்" என்றார்.

வீடியோ
இதைகேட்டு ஷாக் ஆன அந்த பெண், வேறு வழியின்றி, அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு டான்ஸ் ஆடி காட்டி உள்ளார்.. அதை அவர் வீடியோ எடுத்து வைத்து கொண்டாராம்.. மேலும் அடிக்கடி அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையிலும் ஈடுபட்டுள்ளார்.. இதனால் கொதிப்படைந்த அந்த பெண், இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்துள்ளார்.. அந்த புகாரின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நடவடிக்கை
இது குறித்து கோவிந்த நகர் வட்ட அதிகாரி விகாஸ்பாண்டே சொல்லும்போது, போலீசாருக்கு மன அழுத்தத்தை கொடுப்பதற்காகவே இந்த பெண்ணின் வீடியோவை யாரோ வைரலாக்கி வருகிறார்கள்.. இருந்தாலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றார்.... ஆக மொத்தம், ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி ஸ்டேஷனுக்குள் டான்ஸ் ஆட சொன்னது தப்பாக தெரியவில்லை.. இந்த வீடியோ வைரல் ஆனதுதான் இவர்களுக்கு கவலையாக உள்ளது போலும்!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications