உத்தரப் பிரதேச தேர்தல்.. 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 57 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 57 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை வங்கு 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
அடுத்து வரும் மார்ச் 3ஆம் தேதி 57 தொகுதிகளில் 6ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அம்பேத்கர் நகர், பல்ராம்பூர், சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், மஹராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா மற்றும் பல்லியா ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் மொத்தம் 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த முறை மேல்சபை மூலம் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த முறை நேரடியாக மக்களைச் சந்திக்க உள்ளார். அதேபோல பாஜகவில் இருந்து பிரிந்து, சமாஜ்வாடி கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மௌரியா போட்டியிடும் ஃபாசில்நகர் தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.
இந்த 57 தொகுதிகளில் 11 தொகுதிகள் தனித் தொகுதிகள் ஆகும். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த 57 தொகுதிகளில் பாஜக 46இல் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது
வரும் வியாழக்கிழமை தேர்தல் நடைபெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் 2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications