தி ரியல் உபி ஸ்டோரி.. 78 முஸ்லிம் பெண்கள் மதமாற்றம்! இந்துக்களுடன் திருமணம் செய்து வைத்த சாமியார்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 78 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி அவர்களை இந்து ஆண்களுக்கு சாமியார் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா, இத்னானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் 32 ஆயிரம் இந்து பெண்கள், முஸ்லிம் மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆதாரமின்றி வெறுப்பை பரப்பும் வகையில் இப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி இருக்கும் மதமாற்ற சம்பவங்கள் தனியார் இந்தி ஊடகத்தின் கள ஆய்வில் உறுதியாகி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில பரேலியில் உள்ள மதினாத் பகுதியில் அமைந்து இருக்கும் அகஸ்தியா முனி ஆசிரமத்தை சேர்ந்த சாமியார் ஆச்சாரியார் பண்டிட் கேகே சங்காதர் என்பவர் முஸ்லிம் பெண்களை இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த இந்தி நாளிதழ் குழு சாமியாரின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது. அப்போதுதான் பல அதிர வைக்கும் தகவல்கள் அவர்களுக்கு கிடைத்து உள்ளது. சாமியார் சங்காதரின் உண்மையான பெயர் கிருஷ்ணகுமார் ஷர்மா. அப்போது பல்வேறு கேள்விகளை கேட்ட பிறகே சாமியார் அவர்களை உள்ளே அனுமதித்து உள்ளார்.
ஏன் இத்தனை கேள்விகள் என்று கேட்டதற்கு, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தினமும் பலர் தன்னை தேடி வருவதாகவும் கூறி உள்ளார். ராம்பூரை பூர்வீகமாக கொண்ட சங்காதர் பரேலிக்கு 40 ஆண்டுக்கு முன்பாக இடம்பெயர்ந்து உள்ளார். பல்வேறு இந்துத்துவ அமைப்புகளுடன் நெருக்கமாக இருக்கும் கங்காதர் சமூக வலைதளங்களிலும் கணக்கு வைத்து உள்ளார்.
குறிப்பாக பேஸ்புக்கில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் தன்னிடம் பேசி வரும் முஸ்லிம் பெண்களை மதமாற்றம் செய்து அவர்களின் இந்து காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி உள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் சிம்மி கான் என்ற பெண் தன்னை தொடர்புகொண்டு, இந்து இளைஞரை காதலிப்பதாக தெரிவித்ததாக கூறினார்.

அதே நேரம் மதம் காரணமாக அந்த பெண் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை என்றும், உடனே அந்த பெண் குறித்த முழு விபரத்தையும் தான் சேகரித்து இருக்கிறார். அதன் பின்னர் அந்த பெண்ணின் காதலர் குடும்பத்தையும் சந்தித்து பேசி உள்ளார். அப்போது முஸ்லிம் பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். உடனே போலீசார் உதயை நாடியவுடன், இளைஞரின் குடும்பம் திருமணத்துக்கு சம்மதித்து உள்ளது.
அதன் பின்னர் அந்த முஸ்லிம் பெண்ணை இந்து மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து வைத்து இருக்கிறார் சாமியார் சங்காதர். அதன் தொடர்ச்சியாக பல முஸ்லிம் பெண்களை இதுபோல் இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைத்து இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 35 ஆகவும், கடந்த ஆண்டு 40 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.
இது தொடர்பாக இந்து இளைஞர்களுக்கு தான் எந்த பயிற்சியும் அளிக்கவில்லை என தெரிவித்து இருக்கும் சாமியார் சங்காதர், கேரளா ஸ்டோரி படத்தில் வருவதுபோல் நிஜத்தில் நடப்பதாக கூறி உள்ளார். முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை குறிவைப்பதாகவும், அவர்கள் வலையில் விழுந்த பின் பெண்களின் வாழ்கை நரகமாகிவிடுவதாகவும் கூறி உள்ளார். தனியார் ஊடகம் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவில் 78 முஸ்லிம் பெண்களை சாமியார் இந்து மதத்துக்கு மாற்றம் செய்தது தெரியவந்து உள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications