பச்சையா இருந்தாலே பாகிஸ்தான்னு அர்த்தமா? சவுதி கொடியை காலில் போட்டு மிதித்த கும்பல்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பல் ஒன்று அந்நாட்டின் கொடியை ரோட்டில் போட்டு காலால் மிதித்தது. ஆனால் பாகிஸ்தான் கொடியுடன் சவுதி கொடியும் இருந்ததால் இது சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை சீண்டியது. பதிலுக்கு பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவில் பல இடங்களிலிருந்தும் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகளும் ஆதரவு கூட்டங்களும் நடைபெற்றன. சிலர் கொஞ்சம் ஓவராக போய், பாகிஸ்தான் கொடியை அவமதித்தனர்.

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதில், பாகிஸ்தான் கொடியுடன் சேர்த்து சவுதி அரேபியா நாட்டின் கொடியையும் சிலர் காலில் போட்டு மிதித்துள்ளனர். இத்துடன் இஸ்லாமியர்களின் புதின வாக்கியங்கள் அடங்கிய பிரின்ட் அவுட் பேப்பரையும் மிதித்துள்ளனர். பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்திய முஸ்லீம்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சவுதியுடன் நமக்கு எந்த பஞ்சாயத்தும் இல்லை. அதே நேரம், இஸ்லாம் மதம் மீதும் நமக்கு வெறுப்பு கிடையாது.
ஆனால் பாகிஸ்தானை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சவுதி கொடியையும், இஸ்லாத்தின் புனித வரியையும் கும்பல் ஒன்று அவமதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் கும்பலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
"நாங்கள் இங்கு காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். பாகிஸ்தான் மீது எங்களுக்கும் கோபம் இருக்கிறது. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த இஸ்லாம் மதத்தை அவமதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றது. இது லக்ஷர் இ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் கிளையாகும். இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி செய்து வருகிறது. எனவே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தாக்குதலை தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications