அகிலேஷ் யாதவ் ஆட்சியில் மாஃபியாக்கள் சுதந்திரமாக வலம் வந்தனர்: பிரதமர் மோடி அட்டாக்
லக்னோ: அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆட்சியில்தான் மாஃபியாக்கள் சுதந்திரமாக நடமாடினர்; ஆனால் பாஜக ஆட்சியில் மாஃபியாக்கள் ஒழித்து கட்டப்பட்டனர் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
403 தொகுதிகள் கொண்ட உ.பி. சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டங்களாக மார்ச் 7 வரை தேர்தல் நடைபெற உள்ளது.
உ.பி.யின் ஹர்தோய் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உத்தரப்பிரதேச மாநில மக்கள் 2 முறை ஹோலி பண்டிகை கொண்டாட தயாராகி கொள்ளுங்கள். முதலாவது ஹோலி பண்டிகை மார்ச் 10-ந் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாடுவதாகும். மார்ச் 10-ல் ஹோலி கொண்டாட விரும்பினால் வாக்கு சாவடிகளில் கொண்டாடுங்கள்.

சமாஜ்வாதியின் முட்டுக்கட்டை
2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பரிவார்வாதிகள் எங்களை ஆதரிக்கவில்லை. நான் உ.பி. மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக இருக்கிறேன். ஆனால் இதுவரை மக்களுக்கான பணிகளை என்னை செய்யவிடவில்லை. அப்படியானவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்து அரியாசனத்தில் அமர வைக்கப் போகிறீர்கள்?

ஜாதி, குடும்ப அரசியல்
இந்த பரிவார்வாதிகள்தான் ஜாதியத்தை கையில் எடுத்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய பரிவார்வாதிகள்தான் நாற்காலிக்காக, அதிகாரத்துக்காக சொந்த குடும்பத்துக்குளேயே சண்டை போட்டுக் கொள்கின்றனர். நீங்கள் தேர்ந்தெடுத்து ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு எந்த ஒரு குடும்பத்தினருக்கும் சாதகமாக செயல்படவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் குடும்ப அரசியலை அனுமதிக்காது.

மீண்டும் மாஃபியாக்கள்?
அகிலேஷ் யாதவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் மாஃபியாக்கள் சர்வ சுதந்திரமாக நடமாடி வந்தனர். ஆனால் பாஜக ஆட்சியில் மாஃபியாக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினால் மீண்டும் மாஃபியாக்கள் தலையெடுத்துவிடுவார்கள். அதை அனுமதிக்க போகிறீர்களா? இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

யோகி அட்டாக்
இதேபோல் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி ஒருவரின் தந்தை சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவருக்காக பிரசாரம் செய்கிறார்கள். இதுவரை அகிலேஷ் யாதவ் இதுபற்றி வாயே திறக்கவில்லை. பயங்கரவாதிகள் மீது உங்களுக்கு என்ன கரிசனை என கேள்வி எழுப்பினார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications