ஹலோ 108 ஆ... சீக்கிரம் வாங்க... உ.பி.யில் ஆட்டை ஆம்புலன்ஸில் ஏற்றிய இளைஞர்
லக்னோ: உத்திரபிரதேசம் மாநில கஸ்கஞ்ச் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேனை அவசரமாக வரவழைத்து அதில் ஆட்டுக்குட்டியை சிகிச்சைக்கு ஏற்றிய விநோத சம்பவம் நடந்துள்ளது.
ஆம்புலன்ஸில் ஆட்டுக்குட்டியை ஏற்றிய இளைஞரை கண்டு அதிர்ச்சியடைந்த அதன் ஓட்டுநர் அந்த இளைஞரை கடுமையாக சாடினார்.
ஆனால் ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஆட்டுக்குட்டியுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்துகொண்டு அந்த இளைஞர் இறங்க மறுத்துள்ளார்.

சீக்கிரம் வாங்க
உத்திரப்பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் ஹரியா தேத்ரா கிராமத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சேவை அவசரக் கட்டுபாட்டு அறைக்கு நேற்று அழைப்பு சென்றுள்ளது. அதை அட்டண்ட் செய்து பேசிய ஊழியரிடம் மறுமுனையில் பேசிய சுனில் என்ற இளைஞர் அவசரமாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை தங்கள் கிராமத்திற்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

நடவடிக்கை
சுனில் பதற்றத்துடன் பேசியதைக் கேட்ட 108 ஆம்புலன்ஸ் அவசரக் கட்டுபாட்டு அறை ஊழியர், அவசரமாக ஆம்புலன்ஸ் ஒன்றை சுனிலின் கிராமமான ஹரியா தேத்ராவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஓட்டுநரும் என்னவோ..ஏதோ என பதறியடித்து கொண்டு அதிவேகமாக சென்று சுனிலை தொடர்புகொண்டுள்ளார்.

ஆட்டுக்குட்டிக்கு காயம்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அழைப்பை ஏற்று பேசிய சுனில், வந்துவிட்டீர்களா..இதோ வருகிறேன் கதவை திறந்து வையுங்கள் எனக் கூறியுள்ளார். ஆம்புலன்ஸில் இருந்த அவசர கால முதலுதவி சிகிச்சை அளிக்கும் ஊழியர்கள் தயாராக இருந்துள்ளார்கள். ஆட்டுக்குட்டியுடன் வந்த சுனில் அதனை ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளார். இதனைக் கண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்ததோடு கடுமையாக சுனிலை சாடினார்.

இறங்க மறுப்பு
ஆட்டுக்கு காயம் ஏற்பட்டதால் அதனை மருத்துவரிடம் தாம் அழைத்துச்செல்வதாகவும், அதற்காகத் தான் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்ததாகவும் சுனில் தெரிவித்திருக்கிறார். இதனால் கடும் கோபம் அடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலில் வண்டியில் இருந்து நீ இறங்கு எனக் கூறியுள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸில் ஆட்டுக்குட்டியுடன் ஏறி அமர்ந்துகொண்ட சுனில் நீண்ட நேரம் அதிலிருந்து இறங்க மறுத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications