டியூஷனுக்கு போன 15 வயது பள்ளி மாணவி.. கூட்டாக பலாத்காரம்.. விஷம் கொடுத்து கொடூரமாக கொலை!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மீரட் பகுதியில் டியூஷன் சென்ற 15 வயது பள்ளி மாணவியை, சிலர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மீரட் பகுதியில் தலித் பிரிவைச் சேரந்த 15 வயதான சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து டியூஷனுக்கு சென்றுள்ளார்.

டியூஷனில் இருந்து அந்த சிறுமி மாலையில் வீடு திரும்பி வந்துள்ளார். அப்போது, அந்த சிறுமி தனியாக வந்துகொண்டிருந்த பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த சில மர்ம நபர்கள், சிறுமியை வாயை பொத்தி அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளார்கள்,

பலாத்காரம்

பலாத்காரம்

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சிறுமியைக் கடத்திச் சென்ற அந்த மர்ம நபர்கள், 15 வயது பள்ளி மாணவியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு மாணவியை அதே இடத்தில் போட்டுவிட்டு, அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

மனஉளைச்சல்

மனஉளைச்சல்

இதனையடுத்து, அந்த சிறுமி தடுத்தடுமாறி நடந்து வீடு திரும்பிய நிலையில், தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த எல்லாவற்றையும் கூறி அழுதுள்ளார்., தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுமையால், அந்த சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் இப்படியான நிலையில் பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி திடீரென உயிரிழந்தார்.

கொலை என குற்றச்சாட்டு

கொலை என குற்றச்சாட்டு

இது குறித்து சிறுமியின் தந்தை ரோஷன் "என் மகளை பாலியல் பலாத்காரம் செய்த அந்த மர்ம கும்பல் தான், விஷம் கொடுத்து கொலை கொன்றுள்ளது. என் மகள் இறப்பதற்கு முன்பு நடந்த எல்லாவற்றையும் எங்களிடம் கூறிவிட்டாள். உடனடியாக எங்கள் மகளை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்றும், ஆனால் அவள் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார.

இரண்டு பேர் கைது

இரண்டு பேர் கைது

அதே நேரத்தில், சிறுமி உயிரிழக்கும் போது, அவர் கைப்பட எழுதிய கடிதமும் போலீசாருக்கு தற்போது கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், இரண்டுபேரை கைது செய்து உள்ளனர். இதனிடையே சிறுமி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என போலீசார் கூறியுள்ளனர். "சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்றும், போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+