உபியில் பெரும் வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலின் வெற்றி கதவைத் திறக்கும்.. அமித்ஷா பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான அடித்தளத்தை உருவாக்க விரும்பும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு பாஜக தொண்டர்களும் தலா மூன்று குடும்பங்களின் வாக்குகளைப் பெற முயற்சிக்க வேண்டும் என்று வாரணாசியில் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றால், அடுத்த பொதுத் தேர்தலைக் குறிக்கும் வகையில், "2024க்கான கதவுகளைத் திறக்கும்" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்துரையாடிய அமித்ஷா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்
தனது உரையில், பூத் அளவிலான பிரச்சாரங்கள் பலப்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார், அதற்காக "பூத் கமிட்டிகள்" அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமித்ஷா கூறும்போது, "பாஜகவுக்கு வாக்களிக்க ஒவ்வொரு நபரும் தலா 60 பேரை ஊக்குவிக்க வேண்டும், மேலும் அந்த வட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 20 வாக்குகளைப் பெற வேண்டும். ஒரே நேரத்தில், ஒரு கட்சித் தொண்டர், தலா மூன்று குடும்பங்களில் இருந்து வாக்குகளைப் பெற வேண்டும்.
இது சாதாரண தேர்தல் அல்ல, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், தேசத்தின் மாண்பை நிலைநிறுத்துவதற்கும் நடத்தப்படும் தேர்தல் இது. இலவச காஸ் சிலிண்டர்கள் மற்றும் பிரதமரின் பல்வேறு திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க கட்சி நிர்வாகிகள் முன்வர வேண்டும் .
காங்கிரஸ் தொண்டர்கள் பல ஆண்டுகளாக ஊழல் மற்றும் குழப்பம் மற்றும் பிரிவினைவாத அரசியலில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸைப் போல் பாஜகவும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இந்தியா ஒரு பொருளாதார சக்தியாக மாறும். யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் மாஃபியா மற்றும் குண்டர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த உத்தரபிரதேசத்தை உருவாக்க வேண்டும். உ.பி.யில் கிடைக்கும் வெற்றி, 2024ம் ஆண்டி நாடாளுமன்ற வெற்றி காண கதவுகளைத் திறக்கும்" என்று அமித்ஷா ஷா கூறினார்.

எனினும் மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் அதுபற்றி அமித்ஷா எதுவும் பேசவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் காலத்தில் ஊழல் மற்றும் ரவுடிகளின் ராஜ்யம் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தினார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அகிலேஷ் யாதவின் லோக்சபா தொகுதியான அசம்கரை பார்வையிட உள்ளார், அதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையான கோரக்பூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.5 கடலூர்-நாகை-தஞ்சை-திருவாரூர் 5 மாவட்டங்களில் ஒரே நாளில் ஆய்வு; முதலமைச்சரின் பயண விவரம் இதோ!












Click it and Unblock the Notifications