Jan Ki Baat-India News Exit Poll: உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி.. சமாஜ்வாதிக்கு 2வது இடம்..!
உபியில் மீண்டும் பாஜக ஆட்சியே என்று எக்ஸிட் போல் தெரிவிக்கின்றன
லக்னோ: ஜன்கிபாத் இந்தியா நியூஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜகவே பிரதான இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கான 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்து முடிந்தது. உ.பி. மட்டுமின்றி 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் 10-ம் தேதி எண்ணப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2 மாதங்களாக நடந்து முடிந்தது.

பிந்தைய கணிப்பு
உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது... 4 முனை போட்டி என்றாலும், இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும்தான் நேரடி போட்டி ஏற்பட்டது.

கணிப்புகள்
இதனால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நிலையில், பிரபல செய்தி நிறுவனங்கள் எக்ஸிட் போல்- Exit Poll' எனும் தேர்தல் முடிவு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில், ரிபப்ளிக் டிவி வெளியிட்டிருந்த எக்ஸிட் போல் ரிசல்ட்டில், பாஜகவுக்கே பெரும்பான்மை என்று கூறியிருந்தது.

எக்ஸிட் போல்கள்
அதாவது, பாஜக- 240 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதாவது 262 முதல் 277 இடங்கள் வரை பாஜகவுக்கு கிடைக்குமாம்.. சமாஜ்வாதி - 11- முதல் 140 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 7 முதல் 17வரையும், காங்கிரஸ் 4, இதர 2 இடங்களையும் பிடிக்கும் என்கிறது அந்த கணிப்பு.. தற்போது, ஜன்கிபாத் இந்தியா நியூஸ் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் ரிசல்ட்டிலும் பாஜகவுக்கே பெரும்பான்மை என்று கணித்து தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி
பாஜகவானது, 222 முதல் 260 இடங்களை பிடிக்கும் என்றும், அகிலேஷின் சமாஜ்வாதியானது, 135 முதல் 165 இடங்களை தக்க வைக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது. பகுஜன் சமாஜ், 4 முதல் 09 இடங்கள் வரையிலும், காங்கிரஸ் 1 - 3 இடங்களையும், இதர கட்சிகள் 3 முதல் 4 இடங்களையும் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை எடுத்து கொண்டால், பாஜக 41.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது...

காங்கிரஸ்
அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சி 23.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.. அதேபோல, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 22.2 சதவீத வாக்குகள் கிடைத்தது. இரு கட்சிகளும் அதிக அளவு இடங்களை உபியில் கடந்த முறை பெற்றிருந்தனர்.. ஆனால், இந்த முறை இரு கட்சிகளுமே சற்று சறுக்கி உள்ளது.. பகுஜன் சமாஜ் சொல்லி கொள்ளும் அளவுக்கு இடங்களை பெறவில்லை.. காங்கிரஸோ கணக்கிலேயே இல்லை.. இத்தனைக்கு பிரியங்கா, கடந்த ஒரு வருடமாகவே உபியில் முகாமிட்டு வந்தார்.. இதெல்லாம் எக்ஸிட் போல்கள் என்றாலும், விரைவில் உண்மையான தேர்தல் முடிவு தெரிந்துவிடும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications