‛வாட்ஸ்சப் சேனல்’.. மக்களின் குறைகளை தீர்க்க புதிய வழி.. மாற்றி யோசிக்கும் யோகி ஆதித்யநாத்! பின்னணி
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களின் குறைகளை உடனடியாக அறிந்து அதனை சரிசெய்ய வாட்ஸ் அப்பில் சேனல் தொடங்கி உள்ளார். இதன்மூலம் மக்களுடன் அவர் நேரடியாக தொடர்பில் இருப்பதோடு, வரும் நாட்களின் குறைகளை உடனே சரிசெய்ய திட்டமிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போதைய சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

அதோடு ஒவ்வொரு கட்சிகளும் சமூக வலைதளங்களில் தங்களுக்கென புதிய பக்கங்களை திறந்து அரசு மற்றும் கட்சியின் செயல்பாடு மற்றும் அதன் தினசரி செயல்பாடுகள் குறித்த விபரங்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு உத்தர பிரதேச மாநிலத்தை ஆட்சி செய்யும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசும் விதவிலக்கல்ல.
அந்த வகையில் தான் தற்போது யோகி ஆதித்யநாத் அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதாவது முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அனைத்து தரப்பு மக்களும் நேரடியாக தங்களுக்கான குறைகளை வீட்டில் இருந்தபடியே தெரிவிக்கும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக வாட்ஸ்அப்பில் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
அதாவது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் பெயரில் இந்த வாட்ஸ்அப் சேனல் உருவக்கப்பட்டுள்ளது. 'உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம்' என்ற புதிய வாட்ஸ்அப் சேனலில் மக்கள் தங்களின் குறைகளை பதிவிட்டால் அதிகாரிகள் மூலம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ‛‛முதல்வரை தொடர்பு கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவில் இந்த வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தர பிரதேச மாநில முதல்வர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில், ‛‛மாநிலத்தில் உள்ள 25 கோடி மக்களும் ஒரே குடும்பம் தான். இந்த குடும்பத்தில் வாழும் ஒவ்வொருவரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். முதல்வரிடம் எளிதாக பேச வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications