ஆஹா.. தாபாவின் டாய்லெட்டில் இத்தனை விஷயங்களா?.. பெண்கள் ஹேப்பி.. ஆண்கள் கலக்கம்.. கலக்கும் போட்டோ
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயக்ராஜில் ஒரு தாபாவில் தொங்கவிடப்பட்டிருந்த கழிப்பறைக்கான அறிவிப்பு பலகை இன்று சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆண்களும் பெண்களும் சமம். ஆணுக்கு பெண் நிகரானவர் என்றெல்லாம் சொலவடைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இதெல்லாம் சிலரே பின்பற்றுகிறார்கள்.
குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு பெயருக்கு முன் சேர்க்கப்படும் இனிஷியல் முதல் அனைத்திலும் பெண்ணின் தியாகத்திற்கு அநீதி விளைவிப்பதாகவே சிலர் பேசி வருகிறார்கள்.

குழந்தைக்கு
இன்றைய காலகட்டத்தில் குழந்தைக்கு மனைவியின் பெயரையும் இனிஷியலாக சிலர் சேர்க்கும் பழக்கத்தை தொடங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இது போல் கழிவறைகளை அடையாளம் காட்டுவதில் சில இடங்களில் கோபத்தை ஏற்படுத்தும்.

பெண்கள் கழிப்பறை
ஆண்களின் கழிப்பறைக்கு ஏதோ ஒரு முகம் வரையப்பட்டிருக்கும். அது போல் பெண்களின் கழிப்பறைக்கு பெண்ணின் ஒரு முகத்தை வரைந்து காதில் லோலாக்கு, மூக்குத்தி ஆகிய அலங்காரங்களை செய்து வைத்திருப்பது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதையடுத்து சில கழிப்பறைகளில் ஆண்கள், பெண்கள் என எழுதியிருந்தாலும் அது படிக்காதவர்களுக்கு புரியாது என்பதால் இத்தகைய படங்கள் போடும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது.

கார்ட்டூன்
கால போக்கில் தற்போது டாய்லெட்டுகளுக்கு பேன்ட் சர்ட் அணிந்த ஒரு கார்ட்டூன் போன்ற உருவம். அது போல் கவுன் அணிந்திருக்கும் ஒரு உருவம்.. இவற்றையே கழிப்பறைகளுக்கு அடையாளமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் ஒரு தாபாவின் கழிப்பறை இணையத்தில் வலம் வருகிறது.

வைரல் ட்வீட்
பாடகர் மனோஜ் முன்டாஷிர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் "Sir to the left because madam is always right," என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆண்களின் டாய்லெட் இடதுபுறமாகவும் பெண்களின் டாய்லெட் இடதுப்புறமாகவும் இருப்பதைதான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை அர்த்தங்கள்
ஆனால் இதில் பெண்களை போற்றும் வகையில் எத்தனை அர்த்தங்கள் உள்ளன. பெண்கள் எப்போதுமே சரியானவர்கள். பெண்கள் எப்போதுமே சரியான முடிவை எடுப்பார்கள் என பல உள்அர்த்தங்களை குறிப்பிடுகிறது. இந்த புகைப்படத்தை ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்துள்ளனர். 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை குவிக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications