டிஎஸ்பியின் போன் ஸ்விட்ச் ஆஃப்! பதறிய மனைவி! "ஹோட்டல் அக்சயாவில் ஜலஜாவுடன் ஜல்சா"! ஏட்டாக டீபிரமோஷன்
லக்னோ: உத்தரப்பிரதேச கான்பூர் ஓட்டலில் பெண் காவலருடன் தங்கியிருந்த டிஎஸ்பியை காவலராக பதவியிறக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச காவல் துறையின் 26ஆவது பட்டாலியனில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிஎஸ்பி அந்தஸ்தில் துணை கமாண்டராக பணியாற்றியவர் கிருபா சங்கர் கானோஜியா. இவர் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

இவர் தனக்கு சொந்த வேலை இருப்பதாக கூறி ஒரு நாள் விடுப்பில் சென்றார். இதையடுத்து தனது போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். இந்த நிலையில் கிருபா சங்கர் தனது மனைவிக்கு விடுப்பு குறித்து எதுவும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார்.
இதையடுத்து அவருடைய மனைவி, கிருபா சங்கருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. ஒரு நாள் முழுவதும் தனது கணவனை தொடர்பு கொள்ள முடியாததால் அவருக்கு ஏதோ ஆபத்து என நினைத்து உன்னவ் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து கிருபா சங்கரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். அவரது செல்போன் கான்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. யாரோ கிருபா சங்கரை கடத்திவிட்டு அவரது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டதாகவே போலீஸார் நினைத்தனர்.
கிருபா சங்கரின் மனைவியும் அப்படியே பதறினார். இதையடுத்து போலீஸ் படையுடன் அந்த ஹோட்டல் சுற்றி வளைக்கப்பட்டது. அங்கிருந்த வரவேற்பாளர் அறையில் கிருபா சங்கரின் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் , கிருபா தங்கியிருக்கும் அறையின் எண்ணை கூறினர்.
இதையடுத்து போலீஸார் அந்த அறையின் கதவை தட்டிய போது ஏதோ ரூம் சர்வீஸ் என கதவை திறந்தார் கிருபா சங்கர். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பெண் காவலர் ஒருவரும் இருந்துள்ளார். இதையடுத்து கிருபா சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது.
இந்த விவகாரம் குறித்து இறுதி கட்ட விசாரணை நடத்திய உத்தரப்பிரதேச டிஜிபி கிருபா சங்கரை டிஎஸ்பி பதவியிலிருந்து காவலராக பதவியிறக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications