மாஸ்டர் பிளான்.. ஒரேயடியாக மாறிய பாஜக.. களமிறக்கப்பட்ட ஓபிசி வேட்பாளர்கள்.. உ.பியில் செம ட்விஸ்ட்
லக்னோ: உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான 107 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் ஓபிசி வேட்பாளர்கள் பலருக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலுக்காக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சரும் உத்தர பிரதேச பாஜக பொறுப்பாளருமான தர்மேந்திரா பிரதான் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

யோகி ஆதித்யநாத்
இந்த முறை கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. முதல்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இதுவரை மேலவை மூலமாக எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோரக்பூர் தொகுதி ஆதித்யநாத் மிகவும் வலுவாக இருக்கும் தொகுதியாகும். ஐந்து முறை கோரக்பூர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றிபெற்று இவர் லோக்சபாவிற்கு சென்றுள்ளார். இதனால் வலுவான கோரக்பூர் தொகுதியை ஆதித்யநாத் தேர்வு செய்து இருக்கிறார்

கோரக்பூர் தொகுதி
உத்தர பிரதேசத்து சட்டசபை தேர்தலில் ஓபிசி வாக்குகள் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த முறை தேர்தல் முடிவுகளை மாற்ற போவதை ஓபிசி வாக்குகள்தான். இப்படிப்பட்ட நிலையில்தான் அமைச்சர்கள் உட்பட 10 பாஜக எம்எல்ஏக்கள் இதுவரை பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளனர். அதில் 9 பேர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஓபிசி தலைவர்கள். பாஜகவிற்கான ஓபிசி ஆதரவு இதனால் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

அகிலேஷ் யாதவ்
ஓபிசி ஆதரவை பெறுவதன் மூலம் அகிலேஷ் யாதவிற்கான வெற்றிவாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஸ்வாமி பிரசாத் மவுரியா என்ற மூத்த அமைச்சர் மற்றும் ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாத்பதி, பகவதி சாகர், வினய் சாக்யா, முகேஷ் வெர்மா உள்ளிட்ட பல்வேறு ஓபிசி தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இப்படி திடீரென ஓபிசி தலைவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறிய காரணத்தால் அக்கட்சி தலைமை இந்த முறை ஓபிசி வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க தொடங்கி உள்ளது.

ஓபிசி வேட்பாளர்கள்
எப்போதும் ஓசி பிரிவினருக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்கும் பாஜக இந்த முறை ஓபிசி பிரிவினருக்கு வாய்ப்புகளை வழங்கி உள்ளது. அதன்படி 44 ஓபிசி வேட்பாளர்களுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற ஜாதி பிரிவினரை விட ஓபிசி பிரிவினருக்குதான் அதிக இடங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. 19 பட்டியலின வேட்பாளர்களுக்கு பாஜக இந்த முறை வாய்ப்பு வழங்கி உள்ளது அதேபோல் 10 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.

பட்டியலின வேட்பாளர்கள்
கட்சியில் இருக்கும் ஓபிசி நிர்வாகிகள் இடையே நிலவி வந்த அதிருப்தியை அடுத்து பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல் கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த 83 பேரில் 63 பேருக்கு மட்டுமே இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 20 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அவர்களின் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications