கடவுளே.. கதறி அழுத கணவன் மனைவி.. கண்ணீரோடு வீடியோ.. உ.பி தேர்தலில் என்னவெல்லாம் நடக்குது பாருங்க!
லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் நொய்டா தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளர் கதறி அழுத வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
பாஜக சார்பாக உத்தர பிரதேச தேர்தலில் நொய்டா தொகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்ற பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு எதிராக நொய்டா மக்கள் போராட்டம் செய்தது ஒரு பக்கம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
பிரச்சாரம் செய்ய சென்ற மனோஜ் திவாரியை பார்த்து மக்கள் செருப்பை காட்டியதும், தொகுதிக்குள் வர கூடாது என்று பாஜகவினரிடம் பொதுமக்கள் சண்டை போட்டதும் அங்கு வைரலாகிக்கொண்டு இருக்கிறது. இதை பற்றி படிக்க.. இங்கே கிளிக் செய்யவும்.

நொய்டா தொகுதி
இந்த நிலையில்தான் அதே நொய்டா தொகுதியில் தற்போது இன்னொரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த செய்தி பாஜகவை பற்றியது அல்ல சமாஜ்வாதியை பற்றியது. சமாஜ்வாதி சார்பாக நொய்டா தொகுதியில் சுனில் சவுத்திரி என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் வெளியிட்ட வீடியோதான் இந்த பரபரப்பிற்கு காரணம். தனக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இவர் வீடியோ வெளியிட்டுள்ளார். தொடக்கத்தில் நன்றாக பேசும் இவர் போக போக வீடியோவில் கண்ணீர் விட்டுள்ளார்.

கண்ணீர் அழுகை
அதில் கையை கும்பிட்டபடி.. நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். இதற்கு முன் இரண்டு முறை தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டேன். இனியும் தேர்தலில் தோல்வி அடைய எனக்கு இதயத்தில் பலம் இல்லை. நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். எனக்கு அதற்கான தைரியம் இல்லை. என்னை குத்த வேண்டும் என்றால் மக்கள் நேரடியாக இதயத்தில் குத்தலாம். மாறாக எனக்கு வாக்களிப்பதாக கூறிவிட்டு பின்னர் முதுகில் குத்த கூடாது.

வீடியோ டிரெண்ட்
என்னை இதயத்தில் குத்தினால் கூட பொறுத்துக்கொள்வேன்.. முதுகில் குத்த வேண்டாம் என்று கதறி அழுதபடி அந்த நபர் கண்ணீர்விட்டு இருக்கிறார். அவரின் இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. மக்களிடம் எப்படியாவது வாக்கு வாங்கி ஜெயித்துவிட வேண்டும் என்பதற்காக சமாஜ்வாதியின் சுனில் சவுத்திரி இப்படி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மட்டுமின்றி அவரின் மனைவி ப்ரீத்தியும் இதே போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மனைவி
அதில், என்னுடைய கணவனுக்கு வாக்கு அளியுங்கள்.. நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று கண்ணீர் விட்டபடி கையை கும்பிட்டு குறிப்பிட்டு இருக்கிறார். இந்த இரண்டு வீடியோக்களும் இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. இதற்கு முன் நொய்டா தொகுதியில் சுனில் சவுத்திரி 2012, 2017 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இரண்டு முறையும் அவர் அங்கே தோல்வி அடைந்தார். இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் சமாஜ்வாதி சார்பாக சுனில் சவுத்திரிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தோல்வி மேல் தோல்வி
இரண்டு முறை தோல்வி அடைந்ததால் மூன்றாவது முறை தோல்வி அடைய கூடாது என்ற அச்சத்தில் இவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் இவரை எதிர்த்து வலிமையான பாஜகவின் பங்கஜ் சிங் போட்டியிடுகிறார் . பங்கஜ் சிங் உத்தர பிரதேச மாநில பாஜக பொதுச்செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பங்கஜ் சிங் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் ஆவார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications