3 நாள் யாகம்.. 37 வருடங்களில் இல்லாத "சுனாமி".. உ.பியில் வரலாறு படைத்த யோகி.. நடந்தது என்ன?
லக்னோ: உத்தர பிரதேச அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறார் யோகி ஆதித்யநாத். அங்கு சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டு வந்த ஒரு விஷயத்தை யோகி ஆதித்யநாத் சாத்தியப்படுத்தி உள்ளார்.
Recommended Video
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. 403 இடங்களில், 250 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
சமாஜ்வாதி கட்சியோ 118 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தலா 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

உத்தர பிரதேசம்
உத்தர பிரதேச வரலாற்றை எடுத்துக்கொண்டால் அங்கு 1985க்கு பிறகு எந்த கட்சியும் 5 வருடம் ஆட்சி செய்த பின் மீண்டும் ஆட்சிக்கு வந்ததே கிடையாது. 1985க்கு பின் சோனியா காந்தி, வாஜ்பாய், அத்வானி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி என்ற எந்த பெரும் தலைவர்களாலும் தங்கள் கட்சியை மீண்டும் வெற்றிபெற வைக்க முடியவில்லை. 1985க்கு முன் காங்கிரஸ் பல முறை உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து வென்று இருக்கிறது.

காங்கிரஸ் வெற்றி
உத்தர பிரதேசத்தில் சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் வரிசையாக 4 முறை ஆட்சி புரிந்து இருக்கிறது. பாரதிய கிரந்தி தளம் கட்சியும் உத்தர பிரதேசத்தில் பலமுறை வென்றுள்ளது. ஆனால் அங்கு பாஜக கால் பதிக்கவே 30 வருடங்கள் ஆனது. உத்தர பிரதேசத்தில் பாஜக 1977ல்தான் முதல்முறை வென்றது. பின்னர் மீண்டும் 1991ல்தான் பாஜக அங்கு மீண்டும் வென்றது. இடைப்பட்ட காலத்தில் 1982 முதல் 1989 வரை காங்கிரஸ் இரண்டு முறை தொடர்ந்து அங்கு ஆட்சி புரிந்தது. அந்த அளவிற்கு அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருந்த நிலையில் இந்த முறை 4 இடங்களை பிடிக்க கூட முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது.

1985
1991ல் அங்கு வென்ற பாஜக அதன்பின் மீண்டும் உத்தர பிரதேசத்தில் இடம் பிடிக்க பாஜக கடுமையாக போராடியது. 1991க்கு பின் பல வருடங்கள் கழித்து மீண்டும் 2017ல்தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வென்றது. இப்போது மீண்டும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை உத்தர பிரதேசத்தை கைப்பற்றும் வாய்ப்பு பாஜகவிற்கு கிடைத்துள்ளது. 1985க்கு பின் உத்தர பிரதேசத்தில் எந்த ஒரு கட்சியும் இரண்டுமுறை வென்றது இல்லை. அதற்கு முன் கட்சிகள் இரண்டு, மூன்று முறை தொடர்ச்சியாக வென்று இருந்தாலும் 1985க்கு பின் 37 வருடங்களாக உத்தர பிரதேச மக்கள் கட்சிகளை மாறி மாறித்தான் ஆட்சியில் அமர வைத்து இருக்கின்றனர்.

சாதனை
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 1985க்கு முன்பாவது அடுத்தடுத்து உத்தர பிரதேசத்தில் வென்றது. ஆனால் பாஜக ஒருமுறை கூட இங்கு அடுத்தடுத்து ஆட்சியை கைப்பற்றியது கிடையாது, இந்த முறை அந்த வரலாற்றை முறியடித்து உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் என்னும் அரசியல் சுனாமி மீண்டும் அங்கு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். 37 வருட வரலாற்றை பாஜக மாற்றி அமைகிறது. யோகி, மோடி, அமித் ஷா என்ற மூன்று பெரும் தலைவர்களின் அரசியல் வியூகம் பாஜகவிற்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

கடைசி கட்ட தேர்தல்
உத்தர பிரதேசத்தில் 7ம் கட்ட தேர்தலுக்கு பின் முதல்வர் ஆதித்யநாத் வெளியே வரவே இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான போதும் கூட அவர் வெளியே வரவே இல்லை. கோரக்பூரில் இருக்கும் மடம் ஒன்றில் தங்கி தீவிரமாக அவர் தியானம், யாகம் ஆகியவற்றை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் வேண்டியது போலவே பாஜக மிகப்பெரிய இமாலய வெற்றியை பாஜக அங்கு ருசித்து உள்ளது. பாஜக உ.பியை இரண்டாவது முறைக்கு வெல்வது சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் யோகி ஆதித்யநாத் அதை சாத்தியப்படுத்தி உள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications