Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. சட்டசபை தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு Live: 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Subscribe to Oneindia Tamil

உ.பி.தேர்தல் : உத்திரபிரதேச மாநில நான்காம் கட்ட தேர்தலில் மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு. 5 மணி நிலவரப்படி கெரி (லக்கிம்பூர் கெரி) பகுதியில் 57.45%, 62.42%, பில்பித் 61.33% மற்றும் ரேபரேலி 58.40% வாக்குகள் பதிவாகி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது.

இதனையடுத்து 9 மாவட்டங்களில் உள்ள மேலும் 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Uttar Pradesh Fourth Phase Assembly Election Polling LIVE News Updates

Feb 23, 2022, 6:24 pm IST

உத்திரபிரதேச மாநில சட்டசபைக்கு 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு நிறைவடைந்தது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட்களை சீல் வைக்கும் பணி முகவர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
Feb 23, 2022, 6:03 pm IST

உத்திர பிரதேசம் : மாலை 5 மணி நிலவரப்படி பண்டா பகுதியில் 57.48% வாக்குகளும், ஃபதேபூர் தொகுதியில் 56.96%, ஹர்தோய் தொகுதியில்55.40%, கெரி தொகுதியில் 62.45%, லக்னோ தொகுதியில் 54.98%, பிலிபித் தொகுதியில் 61.42%, ரேபரேலி தொகுதியில் 58.32%, சீதாபூர் தொகுதியில் 58.30% மற்றும் உன்னாவ் தொகுதியில் 54.12% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
Feb 23, 2022, 5:57 pm IST

அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குண்டர் கும்பல்களின் வடிவில் நீடித்து வரும் கருமேகங்களின் மூடுபனிக்கு முடிவு கட்டும் வகையில் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது - உ.பி. பிரயாக்ராஜில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம்
Feb 23, 2022, 5:54 pm IST

குடும்பம் சார்ந்த அரசியல் கட்சிகளின் கையில் உத்திரபிரதேசம் பாதுகாப்பாக இல்லை - பிரதமர் நரேந்திர மோடி
Feb 23, 2022, 5:47 pm IST

வெள்ளிக் கரண்டியில் உணவு உண்ட ராகுல், அகிலேஷ், பிரியங்கா ஆகியோர் ஜன்தன் திட்டத்தை கேலி செய்தார்கள், அவர்கள் வறுமையைப் பார்த்ததில்லை. இப்போது, மோடிஜி விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2000 கொடுக்கிறார் - பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம்
Feb 23, 2022, 5:35 pm IST

ஒருவரை பார்த்து பாஜக அச்சப்பட்டால் உடனே சிறையிலடைத்துவிடுகிறது: அகிலேஷ் யாதவ்
Feb 23, 2022, 5:04 pm IST

உ.பி.யில் மாலை 3 மணி வரை 49.89% வாக்குகள் பதிவு
Feb 23, 2022, 4:40 pm IST

உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலாளர் சஞ்சய் பிரசாத் வாக்களித்தார்
Feb 23, 2022, 2:00 pm IST

உ.பி.யில் பகல் 1 மணி வரை 37.45% வாக்குகள் பதிவு
Feb 23, 2022, 1:24 pm IST

வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் மார்ச் 11 கோரக்பூர் சென்றுவிடுவார் முதல்வர் யோகி ஆதித்யநாத்: அகிலேஷ் யாதவ்
Feb 23, 2022, 1:21 pm IST

காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோவில் வழிபாடு நடத்தினார்
Feb 23, 2022, 1:03 pm IST

லக்கிம்பூரில் சமாஜ்வாதி சைக்கிள் சின்னத்தை பெவிகுக் மூலம் மறைத்த மர்ம நபர்கள்- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மாற்றம்
Feb 23, 2022, 12:39 pm IST

லக்கிம்பூரில் சமாஜ்வாதி சைக்கிள் சின்னத்தை பெவிகுக் மூலம் மறைத்த மர்ம நபர்கள்- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மாற்றம்
Feb 23, 2022, 12:19 pm IST

லக்கிம்பூரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா வாக்களித்தார்
Feb 23, 2022, 11:56 am IST

உ.பி. சட்டசபைத் தேர்தல்: முற்பகல் 11 மணிவரை 22.41% வாக்குப் பதிவு
Feb 23, 2022, 11:38 am IST

உ.பி. துணை முதல்வர் தினேஷ் ஷர்மா லக்னோவில் வாக்களித்தார்
Feb 23, 2022, 11:32 am IST

பாஜக மூத்த தலைவர் சுதன்ஷு திரிவேதி லக்னோவில் வாக்களித்தார்
Feb 23, 2022, 11:19 am IST

உ.பி.யில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது பல வாக்குச் சாவடிகளில் புகார்
Feb 23, 2022, 11:19 am IST

3-ம் கட்ட வாக்குப் பதிவில் சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்தால் ஒப்புகை சீட்டில் பாஜகவுக்கு வாக்களித்ததாக புகார் கூறப்பட்டது
Feb 23, 2022, 10:28 am IST

உ.பி. தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெல்லும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
Feb 23, 2022, 10:24 am IST

லக்னோவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வாக்களித்தார்
Feb 23, 2022, 10:09 am IST

உ.பி. சட்டசபை தேர்தல் 4-ம் கட்ட வாக்குப் பதிவு
Feb 23, 2022, 10:05 am IST

உ.பி. தேர்தலில் பாஜக 350 இடங்களை கைப்பற்றும்: பங்கஜ் சிங், பாஜக
Feb 23, 2022, 9:43 am IST

காலை 9 மணி வரை 9.10% வாக்குகள் பதிவாகி இருந்தன
Feb 23, 2022, 9:25 am IST

உ.பி: உத்தர பிரதேசத்தில் சிறுவர்கள் பலர் வீடு வீடாக சென்று மக்களை வாக்களிக்கும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் முன்னெடுப்பின் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது
Feb 23, 2022, 9:06 am IST

நாடு முழுக்க ஹிஜாப்பை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும். ஹிஜாப்பை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - உன்னாவில் வாக்களித்த பாஜக எம்பி சாக்சி மகராஜ் பேட்டி
Feb 23, 2022, 8:54 am IST

உத்தர பிரதேசம்: பாஜக வேட்பாளரும், அமைச்சருமான பிரிஜேஷ் பதாக் லக்னோ காலி கோவிலில் நீண்ட நேர சிறப்பு பூஜை செய்தார். அவர் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிடுகிறார்
Feb 23, 2022, 8:45 am IST

உத்தர பிரதேசம்: ரேபரேலி சதார் தொகுதியில் போட்டியிடும் பாஜக ஸ்டார் வேட்பாளர் அதிதி சிங் ரேபரேலியில் வாக்களித்தார்
Feb 23, 2022, 8:36 am IST

உத்தர பிரதேசம்: லக்னோவில் அதிகாலையில் இருந்து வயதான வாக்காளர்கள் பலர் ஆர்வமாக நின்று வாக்களித்து வருகின்றனர்
Feb 23, 2022, 8:28 am IST

உத்தர பிரதேசம்: இஸ்லாமியர்கள் சமாஜ்வாதியை நம்ப மாட்டார்கள். சமாஜ்வாதிக்கு வாக்களிக்க மாட்டார்கள். அது குண்டர்கள் கட்சி - லக்னோவில் வாக்களித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் மாயாவதி தாக்கு
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+