வீடு தேடி சென்று உதவும் "சிலிண்டர் மகள்".. ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு இலவச சப்ளை.. உபி...யில்..!
ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் இலவசமாக செய்கிறார் ஒரு இளம்பெண்
லக்னோ: யாருக்கெல்லாம் ஆக்சிஜன் சிலிண்டர் தேவையோ, அவர்களுக்கு வீடு தேடி சென்று தந்து வருகிறார் ஒரு இளம்பெண் ஒருவர்.. அதுவும் இலவசமாகவே தருகிறார்.. இதனால், அந்த பெண்ணை "சிலிண்டர்வாலி பேட்டியா" (சிலிண்டரின் மகள்) என்று அந்த பகுதி மக்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
தற்போது வைரஸ் பரவல் அதிகமாகிவிட்டது.. தொற்று பாதிப்பும் அதிகமாகி உள்ளது. உயிரிழப்புகளும் அதிகமாகி வருகிறது..!
பாதிக்கப்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அதனால், ஆஸ்பத்திரிகளிலும் இடமில்லை.. ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

தந்தை
உத்தரபிதேசத்தில் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில், இதை அம்மாநில முதல்வர் மறுத்திருந்தார். ஆனால், இறப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.. இதற்கு முக்கிய காரணம், ஆக்சிஜன் தட்டுப்பாடே காரணம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதித்து ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கி வருகிறார் இதே உபியை சேர்ந்த இளம்பெண் ஒருவர்..

அப்பா
உத்தரகாண்ட் எல்லையில் ஷாஜஹான்பூர் என்ற பகுதியை சேர்ந்த பெண் அர்ஷி.. இவருடைய அப்பாவுக்கு சில நாட்களுக்கு முன்பு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது... எனவே, அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்.. ஆனால், படுக்கை வசதி கிடைக்கவில்லை.. எனவே வீட்டில் வைத்தே தன்னுடைய தந்தையை கவனித்து வந்துள்ளர்.. அப்போது, தன்னுடைய அப்பாவுக்கு உத்தரகாண்டில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஆக்சிஜன் வழங்கி உதவியது..

ஆக்சிஜன்
இதையடுத்து, அப்பா தொற்றில் இருந்து மீண்டுவிட்டார்.. அதற்கு பிறகு, அதே தொண்டு நிறுவன உதவியுடன் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கி வருகிறார். இவருடன் அர்ஷியும் உடன்சென்று ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்கிறார். தன்னுடைய ஸ்கூட்டியில் வைத்தே இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகித்து வருகிறார்.

பாராட்டு
அர்ஷி இதை பற்றி சொல்லும்போது, "உத்தரகாண்ட் என்ஜிஓக்களால்தான் என் அப்பா உயிர் பிழைத்தார்.. இதே முறையை பயன்படுத்தி பாதிக்கப்படும் அனைவருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை அளிக்க முடிவு செய்தேன்.. இதுவரை, சுமார் 45 சிலிண்டர்களை இலவசமாக தந்துளேன்.. எனக்கு கிடைத்த சிலிண்டரில் 18 முறை ஆக்சிஜன் நிரப்பியும் தந்துள்ளேன்" என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications