சுகாதாரத்தில் முந்தும் உத்தரப் பிரதேசம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு திட்டம் தொடக்கம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் தூய்மையை மேலும் சிறப்பாக பராமரிக்க 'தூய்மை இந்தியா திட்டத்தை' பலப்படுத்தும் பணியில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் மூலம் குப்பைகள் இல்லாத கிராமபுறங்களை சாத்தியமாக்கிட மாநில அரசு விரும்புகிறது. இதற்காக விரிவான செயல் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது. அதன்படி சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு கிராமங்களில் தூய்மை மற்றும் துப்புரவுப் பயிற்சிகளை மேற்கொள்ள பயிற்சியளிக்கப்படும். இவர்களை கண்காணிக்க நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள். இந்த செயல் திட்டத்தின் உண்மையான நோக்கம் குப்பைகளை அகற்றுவது மட்டுமல்ல.

மாறாக, குப்பைகளை எப்படி சரியான முறையில் அப்புறப்படுத்துவது என்பதுதான். இதைத் தொடர்ந்து கழிவறைகளை கட்டுவதிலும் மாநில அரசு தீவிர முனைப்ப காட்டி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மாநிலத்தின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். இதே போலதான் தூய்மையும் மாநிலத்திற்கு அவசியமான மற்றொரு விஷயம். தூய்மை இல்லையெனில் அங்கு எதுவும் சிறந்து விளங்காது.
எனவே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு தூய்மை இந்தியா திட்டத்தை சாத்தியப்படுத்திட தீவிரமாக முயன்று வருகிறது. முதற்கட்டமாக மாநிலத்தில் மொத்தம் 2.16 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. அதேபோல அனைத்து கிராமங்களிலும் திட மற்றும் திரவ கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திறந்தவெளியில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது இது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications