என்ன கொடுமை இது? இதுக்கு கூடவா புல்டோசர் அனுப்பி மிரட்டுவாங்க? உ.பியில் யோகி அரசின் அதிர்ச்சி மூவ்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பெரும்பாலான பிரச்சனைகள், வழக்குகளுக்கு புல்டோசர் மூலம் தீர்வு காணும் உத்தர பிரதேச அரசு.. இந்த முறை வித்தியாசமான வழக்கு ஒன்றிற்காக புல்டோசரை பயன்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்திற்கு ஏகப்பட்ட புனைபெயர்கள் உள்ளன. பாஜகவினர் உத்தர பிரதேசத்தை ராம ராஜ்ஜியம் என்று அழைப்பது உண்டு. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியினர் இதை "ஜங்கிள் ராஜ் (காட்டு ராஜ்ஜியம்)", என்கவுண்டர் ராஜ் என்றும் அழைப்பது உண்டு.

இந்த நிலையில்தான் சத்தமே இல்லாமல் உத்தர பிரதேசத்தில் ஆதித்யநாத் அரசு தற்போது புல்டோசர் ராஜ்ஜியமாக மாறி உள்ளது. பொதுவாக ஒரு குற்றம் நடைபெற்றால் அல்லது குற்றம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் அதை மற்ற மாநிலங்களில் போலீஸ் விசாரணை செய்யும்.

பின்னர் அதில் கைது, வழக்கு என்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் உத்தர பிரதேசத்தில் இப்போதெல்லாம் பெரும்பாலான விஷயங்களுக்கு புல்டோசர் மூலம் மட்டுமே தீர்வு காணப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்கள்

சமீபத்தில் பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மா இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை விமர்சனம் செய்து பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. இதை எதிர்த்து உத்தர பிரதேசத்தில் போராட்டம் செய்த இஸ்லாமியர்கள் பலரின் வீடுகள் உத்தர பிரதேசத்தில் இடிக்கப்பட்டன. புல்டோசர் மூலம் பலரின் வீடுகள் இடிக்கப்பட்டன. அதேபோல் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஜாவீத் அகமது என்பவரின் வீடும் மாவட்ட நிர்வாகம் மூலம் இடிக்கப்பட்டது.

மீண்டும் சம்பவம்

மீண்டும் சம்பவம்

அதன்பின் நொய்டாவில் பெண் ஒருவரை சீண்டிய பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கட்டிடத்தை உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் புல்டோசர் உதவியுடன் இடித்தனர். பாஜகவின் விவசாயிகள் நலப்பிரிவு உறுப்பினராக உத்தர பிரதேசத்தில் இருப்பவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவருக்கு சொந்தமான கட்டிடம் நொய்டாவில் இருக்கும் கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் உள்ளது. கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டி என்பது பல வீடுகள் இருக்க கூடிய பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட் சொசைட்டி ஆகும். இங்குதான் பெண் ஒருவருக்கும், ஸ்ரீகாந்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பெண் தாக்குதல்

பெண் தாக்குதல்

அந்த சொஸைட்டியில் சில இடங்களில் மரக்கன்றுகளை நட ஸ்ரீகாந்த் தியாகி முயன்று உள்ளார். ஆனால் இவர் சொசைட்டி விதிகளை மீறி மரக்கன்றுகளை தவறான இடங்களில் நடுவதாக பெண் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இது பெரிதாக வெடித்த நிலையில், தியாகி திடீரென அந்த பெண்ணின் முகத்தில் கையை வைத்து தள்ளிவிட்டது பெரிய சர்ச்சையானது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலானது. இதையடுத்து ஸ்ரீகாந்த் தியாகி வீட்டை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்தது.

 பெண் வழக்கு

பெண் வழக்கு


இந்த நிலையில்தான் வித்தியாசமான வழக்கு ஒன்றிற்காக உத்தர பிரதேச அரசு புல்டோசரை பயன்படுத்தி உள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் பிஜினோர் பகுதியை சேர்ந்தவர் நுதான் மாலிக். இவருக்கும் பெண் ஒருவருக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் மாலிக் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். 5 லட்சம் பணம் மற்றும் கார் கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.

 வரதட்சணை

வரதட்சணை

அந்த பெண் வரதட்சணையை கொடுக்கவில்லை என்றதும் அவரை வீட்டை விட்டும் துரத்தி உள்ளார். இதையடுத்து அலஹாபாத் நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில், அந்த பெண்ணை மீண்டும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். வரதட்சணை கேட்க கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் மாலிக் குடும்பம் இந்த கோர்ட் ஆர்டரை மதிக்கவில்லை.

பெண்

பெண்

அந்த பெண்ணை வீட்டிற்குள் அனுமதிக்காமல் மாலிக் குடும்ப பிரச்சனை செய்துள்ளது. இந்த நிலையில்தான் தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மாலிக் வீட்டிற்கு இன்று புல்டோசரை அனுப்பியது. கோர்ட் ஆர்டர் படி அந்த பெண்ணை வீட்டிற்குள் அனுப்புங்கள். இல்லையென்றால் உங்கள் மீது ஆக்சன் எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் புல்டோசரை வைத்துக்கொண்டு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அந்த பெண்ணை மாலிக் தனது வீட்டிற்குள் அனுமதித்தார். இதனால் சம்பவம் இடத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

சிறிய தகராறு விவகாரத்தில் கூட இப்படி புல்டோசரை பயன்படுத்துவது ஏன் என்று உத்தர பிரதேச அரசை நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+